ஹன்சிகா கணவரை பிரிந்தாரா? திருமணமான இரண்டே ஆண்டில் ஏற்பட்ட மனகசப்பு!

சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது காதல் கணவர் சோஹேல் கதூரியா பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் செய்தி வெளியாகி உள்ளது. திருமணம் ஆகி இரண்டு வருடமே ஆன நிலையில், இவர்களின் பிரிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீய வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக தடபுடலாக நடைபெற்றது.

Hansika Motwani divorce
Photo Credit:

ஹன்சிகா மோத்வானி: ஹன்சிகாவின் திருமண செய்தி வெளியானதுமே, மாப்பிள்ளை பற்றி இணையத்தில் பல செய்திகள் வெளி வந்தன. தொழிலதிபரான சோஹேல் கதூரியா, ஹன்சிகாவின் தோழியின் கணவர் என்றும், தோழியை விவாகரத்து செய்துவிட்டுத்தான், ஹன்சிகா மோத்வானிவை திருமணம் செய்து கொள்கிறார் என்றும் இணையத்தில் செய்தி பரவியது. சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய ஹன்சிகாதான் முக்கிய காரணம் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இது பற்றி பேசி ஹன்சிகா, தோழியின் கணவரை அபகரித்துக் கொண்டதாக செய்திகள் வெளியானதை பார்த்து நான் மிகவும் உடைந்து விட்டேன். அது உண்மை இல்லை, இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள், அது தான் உண்மை என கண்ணீர்மல்க பேசி இருந்தார்.

கருத்துவேறுபாடு: திருமணத்திற்கு பிறகும் படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். இந்நிலையில், ஹன்சிகா மோத்வானி, தனது காதல் கணவர் சோஹேல் கதூரியா பிரிந்து அம்மாவுடன் வாழ்த்து வருவதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்போதில் இருந்தே, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஹன்சிகா தனது தாயுடனும, சோஹேல் தனது பெற்றோருடன் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

தோழியின் கணவர்: திருமணத்திற்குப் பின் ஹன்சிகாவும், சோஹேலும் கூட்டு குடும்பமாக இருக்க முடிவு செய்து உள்ளனர். ஆனால், ஹன்சிகாவிற்கு தனது கணவரின் குடும்பச் சூழலுக்கு ஏற்படி இருக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் சின்ன சின்ன சண்டை அவ்வப்போது ஏற்பட்டுள்ளது. இதை புரிந்து கொண்ட சோஹேலின் பெற்றோர். அதே வீட்டில் மேல் மாடி அறைக்கு சென்றுள்ளனர். இருந்த போதும், ஹன்சிகாவிற்கும் சோஹேலுக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பு மாறாததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வதந்திகள் குறித்து கருத்து கூறிய சோஹேல் கதூரியா, "இது உண்மையல்ல" என்று கூறினாலும், இருவரும் தனித்தனியாக வசிக்கிறார்களா... பிரிந்துவிட்டார்களா என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. ஹன்சிகா மோத்வானியும் சோஹேல் கதூரியா 10 வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X