மினுமினுக்கும் உடை..மயக்கும் அழகில் ஹன்சிகா.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அழகாக கொழு கொழுவென இருந்த ஹன்சிகாவை ரசிகர்கள் சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைத்து வந்தனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் இவரின் அட்டகாசமான போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மும்பையில் பிறந்து வளர்ந்த ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி படங்களில் நடித்தார். அதன்பின் தெலுங்கில், தேசமுதுரு, காந்த்ரி, மஸ்கா உள்ளிட்ட படங்களில் லீட் ரோல்களில் நடித்தார். தெலுங்கில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வந்தன. இதையடுத்து, தமிழில் அவர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

ஹன்சிகா மோத்வானி: அதேசமயம் ஹன்சிகா மோத்வானியின் அழகு, தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. அதன்படி அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

காதல் திருமணம்: ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால், தனது சிறுவயது நண்பர் சோஹெல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா, கடைசியாக மகா படத்தில் நடித்தார். அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்திருந்தும் படம் ஒன்னுக்கும் உதவாமல் போனது. தற்போது இவரிடம் மை நேம் இஸ் ஸ்ருதி, ரௌடி பேபி உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.

இணையத்தில் ஆக்டிவ்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் ஹன்சிகா மோத்வானி, தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்கள், வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பெரன்ட் உடையில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்தள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து ஹன்சிகாவிற்கு இதயத்தை பரிசளித்து வருகின்றனர். தற்போது இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











