கால நல்லா தூக்கி.. புது வித யோகா.. ஹன்சிகாவின் வைரல் பிக்ஸ்!

மும்பை : சமீபத்தில் நடிகர் நடிகைகள் பலரும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நிலையில் நடிகை ஹன்சிகாவும் ஒரு வித்தியாசமான யோகா புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தனது கொழுகொழு தேகத்தை ஸ்லிம்மாக மாற்றிய ஹன்சிகா அதை பெருமையாக அவ்வப்போது புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வித்தியாசமான யோகா செய்யும் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம்

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம்

தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஹன்சிகா மோத்வானி பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்துள்ளார்.

பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி

பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி

சமீபத்தில் தனது அம்மாவின் பிறந்த நாளை சகோதரருடன் இணைந்து வீட்டில் பிரம்மாண்டமாக பலூன்கள் மற்றும் மலர்களால் அலங்காரங்கள் செய்து சர்ப்ரைஸாக கேக் மற்றும் பரிசுப் பொருட்கள் என இந்த லாக்டவுனிலும் அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி அவரை மகிழ்ச்சி படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

தேசமுதுரு திரைப்படத்தின்

தேசமுதுரு திரைப்படத்தின்

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆக்சன் பிளாக்பஸ்டர் திரைப்படமான தேசமுதுரு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட ஹன்சிகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரசிகர்களாக மாறிப்போன

ரசிகர்களாக மாறிப்போன

இவரது கொழுகொழுப்பான உடலமைப்புக்காகவே பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறிப்போன நிலையில் தற்பொழுது உடல் இளைத்து மெலிந்து ஸ்லிம் ஹன்சிகாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு மெலிந்த உடலில் பல்வேறு கவர்ச்சி போட்டோக்களை அவ்வப்போது எடுத்து பகிர்ந்து வரும் ஹன்சிகா இப்போது வித்தியாசமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஆஷமான யோகா

ஆஷமான யோகா

லாக்டவுன் நேரங்களில் நாயகிகள் பலரும் தங்களது நேரங்களை உடற்பயிற்சி செய்வதிலும் யோகா செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஹன்சிகா தற்போது வெளியிட்டுள்ள ஆஷமான யோகா புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.

செங்குத்தாக நிறுத்தி

செங்குத்தாக நிறுத்தி

ஒரு குறுகிய அறைக்குள் மெத்தை மேல் ஒரு கையை தலையில் ஊன்றிக்கொண்டு ஒய்யாரமாக படுத்தவாறு பிங்க் கலர் உடற்பயிற்சி உடை அணிந்து கொண்டு தனது வலது காலை மட்டும் தூக்கி செங்குத்தாக நிறுத்தியபடி அதை லாவகமாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அபரிமிதமான யோகா

அபரிமிதமான யோகா

இதுவரை கவர்ச்சியிலும், க்யூட்டான புகைப்படங்களில் மட்டுமே ஹன்சிகாவை பார்த்து வந்த ரசிகர்கள் இந்த அபரிமிதமான யோகாவை பார்த்த ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X