கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும்..காளிகாம்பாள் கோவிலில் மனம் உருகி பிரார்த்தனை செய்த ஹன்சிகா!

சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் மனம் உருகி பிரார்த்தனை செய்து செய்தார்.

கொழுக்கு மொழுக்கு நாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஹன்சிகா மோத்வானி இப்போது ஒட்டி உணர்ந்து போய் ஆளே மாறிவிட்டார்.

சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த ஹன்சிகா பட வாய்ப்புக்காகத்தான் இப்படி எடையை குறைத்து கொண்டார். ஹன்சிகாவை கும்முனு பார்த்த ரசிகர்களுக்கு இந்த மாற்றம் சுத்தமாக பிடிக்கவில்லை என்று பரவலாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானியின் 50வது திரைப்படம் மஹா சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்த படம் பல பிரச்சனைகளை கடந்து வெளியானது. இந்த படத்தில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருந்தால், சிம்பு ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்தனர். ஆனால், படத்தின் கதை சுமாராக இருந்ததால், திரையரங்கில் வெளியான சில நாட்களிலேயே படம் காற்று வாங்கியது.

கைவசம் உள்ள படங்கள்

கைவசம் உள்ள படங்கள்

தற்போது ஹன்சிகா பார்ட்னர், 105 நிமிடங்கள், என் பெயர் ஸ்ருதி, ரவுடி பேபி, கார்டியன் ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். மேலும், கதாநாயகியை மையமாக வைத்து இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்திலும் கமிட்டாகி உள்ளார். இதில் ஹன்சிகா முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

த்ரில்லர் திரைப்படம்

த்ரில்லர் திரைப்படம்

எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி, த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தை மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 தயாரித்து வருகிறார். இப்படத்தில், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மனம் உருகி பிரார்த்தனை

மனம் உருகி பிரார்த்தனை

இந்நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானி சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு இயக்குநர் கண்ணணுடன் சென்று மனம் உருகி பிரார்த்தனை செய்து செய்தார். நடிகை ஹன்சிகா தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதூரியா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதற்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X