Hansika motwani: ஸீ-த்ரூ புடவையில் கலக்கல் ஜகல்பந்தி.. ரசிகர்களை கிறங்கடித்த ஹன்சிகா கிளிக்ஸ்!

சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். முன்னதாக தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பூ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர், ஸ்லிம்பிட்டாகவும் மாறி அசத்தினார். திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிய போதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழிலும் இவரது படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஹன்சிகா, தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஸீ-த்ரூ புடவையில் புதிய போட்டோஷுட்டை எடுத்துள்ள ஹன்சிகா, அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஹன்சிகாவின் நடிப்பில் MY3 வெப் தொடர் வெளியாகி சொதப்பலாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக காந்தாரி உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஹன்சிகா, தன்னுடைய திருமண வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பாக நடைபோட்டு வருகிறார். சமீபத்தில் இவருக்கு பிஎம்டபள்யூ 6 ஜிடி காரை குடும்பத்தினர் பரிசாக கொடுத்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்தக் காரின் விலை 75 லட்சத்திற்கும் அதிகம்.

Actress Hansika motwanis latest photoshoot pictures

நடிகை ஹன்சிகா மோத்வானி: நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கியவர். தொடர்ந்து நாயகியாக தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்துள்ள ஹன்சிகாவிற்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்ததால், திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். காந்தாரி உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் ரிலீசுக்க காத்திருக்கின்றன.

Actress Hansika motwanis latest photoshoot pictures

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் MY3 வெப் தொடர் ரிலீசாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. வாய்ப்புகள் குறைந்த போதிலும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார் ஹன்சிகா. இதனிடையே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இதனால் அவரை 6 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிய போட்டோஷுட் ஒன்றை எடுத்து அதன் புகைப்படங்க்ளை பதிவிட்டுள்ளார்.

Actress Hansika motwanis latest photoshoot pictures

புதிய போட்டோஷுட்: ஸீ-த்ரூ புடவையில் ஹன்சிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி தெளித்துள்ளனர். பலவிதமான முகபாவனைகளையும் போஸ்களையும் இந்தப் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. ஹன்சிகாவிற்கே உரிய அக்மார்க் புன்னகையும் இந்த புகைப்படங்களில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் இந்தப் புகைப்படங்களை லைக் செய்துள்ளனர். முன்னதாக ஹன்சிகாவின் புத்தாண்டு கொண்டாட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தன.

Actress Hansika motwanis latest photoshoot pictures

முன்னணி நடிகர்களுடன் ஜோடி: இந்தியில் ஹவா என்ற படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, தொடர்ந்து ஷகலக பூம் பூம் என்ற இந்தி தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தமிழில் தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். விஜய், சூர்யா, சிம்பு, சித்தார்த், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, உதயநிதி, தனுஷ், சுந்தர் சி, பிரபுதேவா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ள ஹன்சிகாவை ரசிகர்கள் கொண்டாடினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X