Actress Hansika: ராஷ்மிகாவாக மாறிய ஹன்சிகா.. சாமி பாடலுக்கு க்யூட் டான்ஸ்!

மும்பை: நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கேரியரை துவங்கினார். ஹிந்தியில் சில சின்னத்திரை தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்த இவர் கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுதுரு படத்தில் நாயகியாக என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழிலும் தனுசுடன் இணைந்து மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை கொடுத்தது. கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகா குட்டி குஷ்பூ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய உடலை ஸ்லிம்மாக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார் ஹன்சிகா. அவரது இந்த மாற்றம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இதை எடுத்து ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார் ஹன்சிகா.

Hansika Instagram Pushpa movie tamil cinema

நடிகை ஹன்சிகா மோத்வானி: நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். இந்தியில் சின்னத்திரை தொடர்களிலும் சில நிகழ்ச்சிகளிலும் தோன்றிய இவர் கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுதுரு படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து தமிழில் படத்தின் மூலம் தனுசுடன் இணைந்து தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஹன்சிகா, விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் இரண்டு படங்களில் அடுத்தடுத்து இணைந்து நடித்துள்ளார்.

முன்னணி நடிகை: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே திருமணமாகி செட்டில் ஆகியுள்ளார். திருமணம் ஆன நிலையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழிலும் இவரது நடிப்பில் சில படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஹன்சிகா. அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்கள், தன்னுடைய படங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

புஷ்பா பாடலுக்கு டான்ஸ்: அந்த வகையில் தற்போது புஷ்பா பட பாடலுக்கு இவர் ரீல்ஸ் செய்து instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடிப்பில் வெளியான சாமி பாடலுக்கு தான் தற்போது ஹன்சிகா ரீல்ஸ் செய்துள்ளார். இந்த பாடலுக்காக பாவாடை தாவணியில் நீண்ட தலை முடியுடன் அவர் காணப்படுகிறார். அவரது இந்த லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பாடலில் தனியாக ஆடாமல், சிலருடன் இணைந்து ஆடியுள்ளார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளை ஈர்க்கும் வகையில் சமூக வலைதளத்தில் அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் ஹன்சிகா.

அடுத்தடுத்த படங்கள்: இவரை இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வந்த ஹன்சிகா, இறுதியாக பார்ட்னர் என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இவரது நடிப்பில் காந்தாரி, ரவுடி பேபி, மேன் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஹன்சிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X