Hansika: மற்றவர்கள் கேலிக்காக இப்படியா முடிவெடுப்பாங்க.. ஹன்சிகா குறித்து வெளியான சீக்ரெட்!

சென்னை: நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்திலும் காசு பார்த்தார் ஹன்சிகா. இவரது திருமணம் பிரபல ஓடிடி சேனலில் ஒளிபரப்பானது.

Actress Hansika shares about the language issue in Tamil

இந்நிலையில் தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

தமிழில் பேசுவதற்கு தயக்கம் காட்டும் ஹன்சிகா: நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன. முதல் படமான தனுஷின் மாப்பிள்ளை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கொழுக் மொழுக் என்று இருந்த இவரை சின்ன குஷ்பூ என்று ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் திடீரென தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மானார்.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய பிசினஸ் பார்ட்னர் சொஹைல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கடந்த ஆண்டில் இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் பேலசில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து இவர்களது திருமண வீடியோ லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. முன்னதாக நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஹன்சிகாவின் வீடியோ வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்தது.

இந்த வீடியோவில் தனது முந்தைய காதல்கள் குறித்தெல்லாம் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். திருமணத்திற்கு பிறகு அதிகமான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஹன்சிகா. திருமணமான நான்கே நாட்களில் இவர் மீண்டும் படங்களில் நடிக்க கிளம்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது கேரியருக்கு சிறப்பாக சப்போர்ட் செய்து வருகிறார் சொஹைல்.

Actress Hansika shares about the language issue in Tamil

இந்நிலையில் நடிகை ஹன்சிகா சமீபத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழ் சினிமாவில் கடந்த 13 ஆண்டுகளாக நடித்துவரும் நிலையில், இன்னும் சரியாக தமிழ் பேசுவதில்லையே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹன்சிகா, தான் செட்டில் தமிழில் பேசினால் அனைவரும் சிரிப்பதாகவும், அதனால் தான் தமிழில் பேசுவதில்லை என்றும் கூறியுள்ளார். தனக்கு கொடுக்கப்படும் வசனங்களை மட்டுமே பேசுவதில் தான் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் ஓரளவுக்கு பேசும் திறமை கொண்டவர் ஹன்சிகா. ஆனால் அவரை மற்றவர்கள் கேலி செய்கிறார்கள் என்பதற்காக தமிழில் பேசுவதில்லை என்ற முடிவை அவர் எடுத்துள்ளார். மேலும் புதிய மொழியை கற்பதில் தனக்கு சிரமம் இருப்பதாகவும் அவர் முன்னதாக தெரிவித்திருந்தார். தமிழில் அதிகமான படங்களில் நடித்துவரும் ஹன்சிகா, தொடர்ந்து தமிழில் பேசி ரசிகர்களை கவர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X