படம் ஓடுதோ, இல்லையோ, அவங்களுக்கு வாய்ப்பு கிடைச்சுட்டே இருக்கும்..நெபோடிசம் பற்றி பிரபல நடிகை!

By

மும்பை: வாரிசு நடிகர், நடிகைகளின் படங்கள் ஓடுவதில்லை என்றாலும் அவர்களுக்கு வாய்ப்பு மட்டும் வந்துகொண்டே இருக்கும் என்று நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஹினா கான். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

ஸ்மார்ட்போன், விக்ரம் பட்டின், ஹேக்டு (hacked) லைன்ஸ் (Lines) ஆகிய படங்களில் நடித்துள்ள ஹினா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

 பாலிவுட்டில் நெபோடிசம்

பாலிவுட்டில் நெபோடிசம்

இப்போது வெப் தொடரிலும் நடித்து வரும் ஹினா, தன்னுடன் டிவி தொடரில் நடித்து வந்த ராக்கி ஜெய்ஸ்வாலை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு, நெபோடிசம் பற்றிய பேச்சு பரவலாகி இருக்கிறது, பாலிவுட்டில். வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம்தான் அங்கு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 கண்டபடி விளாசினர்

கண்டபடி விளாசினர்

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக இதுபற்றி விவாதித்து வந்தனர். பிரபல வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தளப் பக்கங்களுக்கே சென்று சரமாரியாக, கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அவர்களை கண்டபடி விளாசினர். இதனால் சத்ருகன் சின்ஹாவின் மகள் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா உட்பட சில நடிகைகள் சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து விலகினர்.

 கவனிப்பார்கள்

கவனிப்பார்கள்

இந்நிலையில் நெபோடிசம் பற்றி நடிகை ஹினா கானிடம் கேட்டபோது கூறியதாவது: நான் என்னைப் பற்றி சொல்கிறேன். சினிமா, டிவி, வெப்சீரிஸ், மியூசிக் வீடியோஸ் என நடித்திருக்கிறேன். டிஜிட்டல் படங்களில் நடித்துவருகிறேன். என்னால் எவ்வளவு சிறப்பாக நடிக்க முடியுமோ, அப்படி நடிக்கிறேன். நான் நன்றாக நடித்தால், யாராவது நம்மை கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்.

 சலுகைகள் உண்டு

சலுகைகள் உண்டு

ஒரு இயக்குனரோ, பெரிய தயாரிப்பாளர்கள் கண்ணிலோ, நமது நடிப்பு பட்டால் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், வாரிசு நடிகர், நடிகைகளுக்கு இதில் இருந்து சலுகைகள் உண்டு. நான் ஒரு பெரிய படத்தில் நடித்து, அந்தப் படம் ஓடாவிட்டால் எனக்கு வேறு வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். ஆனால், அவர்களுக்கு படம் ஓடுதோ, இல்லையோ, வாய்ப்புகள் மட்டும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறு ஹினா கான் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X