வலிமை கதாநாயகி ஹுமா குரேஷிக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து !

மும்பை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக காலா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஹுமா குரேஷி தற்பொழுது தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்தியில் வளர்ந்துவரும் கதாநாயகியாக இருக்கும் ஹுமா தற்பொழுது தென்னிந்தியாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் காலா திரைப்படத்தின் மூலம் ஜரினாவாக நம் அனைவருக்கும் அறிமுகமான ஹுமா குரேஷி ஜூலை 28 ஆம் தேதியான இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி சமூக வலைதளங்களில் இவருக்கு ரசிகர்கள் உட்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஹுமா குரேஷி

ஹுமா குரேஷி

பார்த்தவுடனே பற்றிக்கொள்ளும் அழகைக் கொண்டு இந்தி சினிமாவின் குயினாக வலம் வரும் ஹுமா குரேஷி இப்பொழுது பலராலும் உற்று நோக்கப்படும் திறமை மிக்க வளர்ந்துவரும் நாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஹிந்தி திரைப்படத் துறையில் பல்வேறு திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வரும் இவர் முதன்முதலில் அறிமுகம் ஆக இருந்தது தல அஜித் திரைப்படத்தில் தான்.

படத்தில் இருந்து விலகி

படத்தில் இருந்து விலகி

கடந்த 2012 ஆம் ஆண்டு தல அஜித்தின் மிரட்டலான நடிப்பில் வெளியான பில்லா 2 திரைப்படத்தின் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தது ஹுமா குரேஷி தான். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடக்க கொஞ்சம் தாமதமானதால் அப்போது வளர்ந்து வரும் கதாநாயகியாக இருந்த இவர் வேறு வழியில்லாமல் இந்த படத்தில் இருந்து விலகி பாலிவுட்டில் வெளியான கேங்ஸ் ஆப் வஸ்சேபுர் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் எனது அறிமுகத்தை கொடுத்தார்.

ஜரினாவாக தமிழ் ரசிகர்களுக்கு

ஜரினாவாக தமிழ் ரசிகர்களுக்கு

இவ்வாறு இவர் நடிக்க இருந்த முதல் தமிழ் படமே நழுவிப் போக இந்தியில் உச்ச நட்சத்திரங்கள் நடித்த பல படங்களில் நடித்து தற்பொழுது பிரபலமான நடிகையாக வலம் வரும் ஹுமா குரேஷி, சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து தமிழில் மாஸ் என்ட்ரி கொடுத்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இரண்டாவது படமான காலாவின் மூலம் ஜரினாவாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் நடித்த முதல் படத்திலேயே பல ரசிகர்களை கவர்ந்தது தமிழிலும் பிரபலமாகியுள்ளார்.

வலிமை திரைப்படத்தில்

வலிமை திரைப்படத்தில்

இவ்வாறு ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவரை தமிழ் ரசிகர்கள் தமிழ் திரைப்படங்களில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் தல அஜித் மற்றும் எச். வினோத் இரண்டாம் முறையாக இணையும் வலிமை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். பில்லா 2 திரைப்படத்தில் நழுவிய வாய்ப்பு தற்போது வலிமை திரைப்படத்தில் கூடியுள்ளதை நினைத்து ரசிகர்கள் பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு தமிழில் நடித்த ஓரிரு படங்களிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹுமா குரேஷி ஜூலை 28 ஆம் தேதியான இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களின் மூலம் இவரை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X