“ஆமாம், அந்த இயக்குநரைத்தான் காதலிக்கிறேன்”.. முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஜினி ஹீரோயின்

இயக்குனர் முடாசர் அசிசை காதலிப்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் நடிகை ஹூமா குரேஷி.

சென்னை: நடிகை ஹூமா குரேஷி தான் ஒருவருடன் ரிலேஷன்சிப்பில் இருப்பதை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசிப்பூர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹூமா குரேஷி. அந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டதை தொடர்ந்து நிறைய இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹூமா குரேஷி. அந்த படத்தில் ரஜினியின் முதல் காதலி வேடத்தில், ஜரினா என்ற பெயரில் நடித்திருந்தார்.

காதல்

காதல்

நடிகை ஹூமா குரேஷியும், இயக்குனர் முடாசர் அசிசும் காதலிப்பாக நீண்ட நாட்களாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் இருவருமே அதுகுறித்து வெளிப்படுத்தியது இல்லை. அவர்கள் தொடர்ந்து டேடிங் செய்து வந்தது மட்டும் பாலிவுட் முழுவதும் பிரபலம். இந்நிலையில் தான் முடாசர் அசிசை காதலிப்பதை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார் ஹூமா குரேஷி.

பிரார்த்தனை

பிரார்த்தனை

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'முடாசரின் பல நிலைகள் (மூட்). நிச்சயம் அது ஒரு விசித்திரமான பயணம். நீ செய்யும் அனைத்து விஷயங்களை நினைத்து நான் பெருமைகொள்கிறேன். உனது ஆசைகள் அனைத்து நிறைவேற வேண்டும் என எனது அடிமனதில் இருந்து பிராத்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள்", என வாழ்த்தியுள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஹூமாவுக்கு பதில் அளித்து முடாசர் செய்துள்ள பதிவில், "நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இதற்காக என்னால் நன்றி எல்லாம் சொல்ல முடியாது. அதற்கு பதிலாக உனது காதலை நினைத்து பார்த்து மகிழ்கிறேன். எப்போதும் உண்மையாய் இரு. நீயாய் இரு. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்", என குறிப்பிட்டுள்ளார்.

எப்போது திருமணம்?

எப்போது திருமணம்?

இதன் மூலம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது தான் பாலிவுட்டின் இப்போதைய ஹாட் டாப்பிகாக உள்ளது. தற்போது காதலை பற்றி தெரிவித்துள்ள இவர்கள், விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: huma qureshi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X