ஏற்கனவே ஒல்லி பெல்லி.. மீண்டும் எடை குறைந்த பிரபல நடிகை.. டாப் ஆங்கிள் செல்ஃபி வெளியிட்டு அசத்தல்!
சென்னை: ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் நடிகை இலியானா இப்போது மீண்டும் உடல் இளைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இலியானா. அடிக்கடி, தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
கூடவே ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்வதும் வழக்கம். இந்நிலையில் இப்போது தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் ஒல்லியானார்
ஏற்கனவே ஒல்லி தோற்றம் கொண்ட 33 வயது இலியானா, இப்போது மீண்டும் ஒல்லியாகி இருக்கிறார். இந்த லாக்டவுன் நேரத்தில் உடலை நன்றாக குறைத்துள்ளார். ஒல்லி தேகத்துடன் டாப் ஆங்கிளில் இருந்து எடுத்துள்ள செல்பி போட்டோவை பதிவிட்டுள்ள நடிகை இலியானா, அதற்கு அழகான கேப்ஷனை வெளியிட்டுள்ளார்.

உங்களுக்காக
அதில், உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் தனித்துவமான அழகை கொண்டது. அதை மனரீதியாகவும் சரியாக பராமரித்துக் கொள்ளுங்கள். நன்றாக உடை அணிந்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்காக அல்ல, உங்களுக்காகச் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இந்த போட்டோவை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். ஆயிரணக்கான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பாக இருங்கள்
சிலர், நீங்கள் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். பாதுகாப்பாக இருங்கள் இலியானா, கொரோனா ஓவர் வேகத்தில் சுத்துது என்று கூறியுள்ளனர் சிலர். நண்பன் படத்தில் இருந்து உங்களில் தீவிர ரசிகனாகிவிட்டேன் என்று கூறியுள்ளார் ஒரு ரசிகர். இன்னொருவர், பிட்னஸ்க்காக ஒரு யூடியூப் சேனல் தொடங்குங்களேன் என்று ஐடியா கொடுத்திருக்கிறார்.

ஆண்ட்ரு நீபோன்
நடிகை இலியானாவின் இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரு நீபோன் என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிரிந்து விட்டனர்.

காதல் தத்துவம்
இதனால், தனது காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கினார் இலியானா. பின்னர் காதல் பற்றி தத்துவமாக சில விஷயங்களை தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பானது. சமீபத்தில் காதல் பற்றிய கேள்வி கேட்ட ரசிகர் ஒருவரைக் கடுமையாகச் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் பச்சனுடன்
தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர் இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். பின்னர் இந்தி படங்களில் கவனம் செலுத்திய அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பன் படம் மூலமாக தமிழுக்கு வந்தார். ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக அவர் நடித்திருந்தார். இப்போது அபிஷேக்பச்சனுடன் இணைந்து த பிக்புல் என்ற படத்தில் நடித்துள்ளார். இது ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











