கையில் ட்ரிப்ஸ்.. மருத்துவமனையில் விஜய் பட நடிகை.. பதறிப்போன ஃபேன்ஸ் !

சென்னை : விஜய் பட நடிகை இலியானா கையில் ட்ரிப்ஸுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்தது, அவரது ரசிகர்கள் பதறிப்போய் நலம் விசாரித்து வருகின்றனர்.

தெலுங்கில் தேவதாசு என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா.

இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான கேடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

நடிகை இலியானா

நடிகை இலியானா

நடிகை இலியானா என்றதும் நம் நினைவுக்கு வருவது நண்பன் படத்தில் தனது ஒல்லி பெல்லி இடையை காட்டி "இருக்கானா இடுப்பிருக்கானா" பாடல் தான். இந்த பாடலில் தனது இடையை குலுக்கி குலுக்கி ஆட்டம் போட்டு இருப்பார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் ஏகப்பட்ட படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த அம்மணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பாலிவுட்டில் ஓவர் கவர்ச்சி

பாலிவுட்டில் ஓவர் கவர்ச்சி

இதையடுத்து, டோலிவுட்டுக்கு சென்ற இலியானாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறி பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். அதன்பின் பாலிவுட்டிற்கு சென்று இலியானா. ஓவர் கவர்ச்சியில் அலப்பறை கொடுத்து வருகிறார். அவ்வப்போது பிகினியில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.

சரியான நேரத்தில் சிகிச்சை

சரியான நேரத்தில் சிகிச்சை

இந்நிலையில், நடிகை இலியானாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கையில் ட்ரிப்ஸுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து மூன்று பாட்டில் குளூக்கோஸ் ஏறுகிறது என்றும், சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

பதறிப்போன பேன்ஸ்

பதறிப்போன பேன்ஸ்

எதனால், உடல்நலம் பாதிக்கப்பட்டது, ஏன் குளூக்கோஸ் ஏறுகிறது என்று எந்த விவரத்தையும் அவர் தெரிவிக்காததால், ரசிகர்கள் பதறிப்போய் என்ன ஆச்சு என்று கேட்டு வருகின்றனர். ஆனால் ஃபுட் பாய்சன் காரணமாக இலியானாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தெரிந்து கொண்ட பின்பே அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

More from Filmibeat

Read more about: health உடல்நலம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X