For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தண்ணீரை சூடேற்றிய நடிகை.. வாய்பிளந்த ரசிகர்கள்.. வைரல் பிக்ஸ் !

  |

  மும்பை: சின்னஞ்சிறு இடுப்பும் சிங்கார நடிப்பும் கொண்டு நம்மையெல்லாம் வசியம் செய்து வந்தவர் நடிகை இலியானா. அவரது மெல்லிய இடுப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர் .சமீபத்தில் ஸ்விம் சூட்டில் கடலுக்கு அடியில் நீந்தும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

  Amala Paul Shares emotional message on losing father | Lock Down

  நீல நிற பிகினியில் கடலுக்கு அடியில் நீந்திச்செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புயகைப்பைப்படங்கள் மிகவும் வைரலாக பரவிக்கொண்டுவருகிறது .இதனை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

  எப்போதும் வித விதமான உடைகளில் தென்படும் இலியானா சமீப காலமாகவே பிகினி உடையலையே தென்படுகிறார் .இவர் வெளியிட்டு உள்ள இந்த புகைப்படங்கள் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கின்றது.

  மாற்றான் பட ஷூட்டிங்கிலே பார்த்தேன்.. வெட்டுக்கிளி அட்டகாசம்.. விளக்கமாக சொல்லும் கே.வி. ஆனந்த்!மாற்றான் பட ஷூட்டிங்கிலே பார்த்தேன்.. வெட்டுக்கிளி அட்டகாசம்.. விளக்கமாக சொல்லும் கே.வி. ஆனந்த்!

  ஸ்விம்மிங்

  ஸ்விம்மிங்

  இந்த லாக்டவுன் நேரத்தில் எல்லா நடிகைகளும் தங்களுடைய கவர்ச்சி படங்களையும்,உடற்பயிற்சி செய்யும் படங்களையும் இன்னும் சிலர் சமையல் செய்யும் படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இலியானா இப்போது கடலுக்கு அடியில் துளி கூட பயமில்லாமல் ஸ்விம் ரைடு சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் அவரது பக்கத்தில் பதிவிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே பற்றி எறிய தொடங்கிவிட்டது.

  விஜய் நடிகை

  விஜய் நடிகை

  தமிழில் நண்பன் மற்றும் கேடி போன்ற படங்களிலில் நடித்துள்ள இவர் தெலுங்கில் போக்கிரி, ஜூலை,கிக் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனிக்கென ஒரு தனி சர்காரை நடத்தி வந்தார், இந்நிலையில் இந்தியிலும் பல பட வாய்ப்புகள் வர அங்கும் பர்ஃபி, படா போஸ்டர் நிக்லா ஹீரோ, என ஏராளமான படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்து அங்கும் தனது கொடியை பறக்க விட்டுள்ளார். மேலும் தான் நடித்த முதல் இந்தி படத்திலேயே பிலிம் ஃபேர் பெஸ்ட் அக்ட்ரஸ் டேபியூட் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  கடலுக்கடியில் கடற்கன்னி

  கடலுக்கடியில் கடற்கன்னி

  இப்போது இலியானா கடலுக்கடியில் நீந்தியவாறு சுற்றி வரும் படங்களை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். கடலுக்கடியில் கன்னி என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதில் ஒரு நீல நிற நீச்சல் உடையில் அவர் தனது பளபளப்பான கால்கள் தெரியும்படி கடலுக்கடியில் நீந்துவதை பார்க்கும் போது நமக்கே கடல் கன்னியை பார்த்தது போல தோன்றும்.

  நிலாவின் பிரகாசம்

  நிலாவின் பிரகாசம்

  பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்களும் மீன்களே, உன்னைக் காணும் போது எனக்குள் தோன்றியது என ஒருவர் அப்படத்தை பார்த்து வர்ணித்துள்ளார், மற்றொருவர் நிலா உன்னிடம் இருந்து பிரகாசத்தை எடுத்து கொள்கிறது நீங்கள் அவ்வளவு பிரகாசமாய் இருக்கின்றீர்கள் என நிலவுடன் இந்த நீந்தும் புதுமையை பாராட்டி பேசிவருகின்றனர் சில நெட்டிசன்கள். சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் பல நடிகைகளுக்கு மத்தியில் இது மாதிரியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே குஷி தான். தற்போது இணையதளப்பக்கத்தில் இந்த படங்கள் வைரலாக பரவி வருகின்றது.

  English summary
  Actress Ileana posted a swimming underwater photo Instagram.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X