குளிர்காலத்திற்கு குளு குளு போட்டோ ஷூட்.. அசத்தும் இந்துஜா!
சென்னை : விஜய் இரட்டை வேடத்தில் கலக்கிய பிகில் படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமானவர் நடிகை இந்துஜா.
இப்பொழுது விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் காக்கி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம் ஒரு சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் வந்து செல்லும் இவர் இப்பொழுது குளிர் காலத்திற்கு ஏற்ற குளு குளு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த செம க்யூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு உள்ளது

இரண்டாவது கதாநாயகியாக
இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர் லீட் ரோலில் நடித்த மேயாத மான் திரைப்படத்தில் தங்கையாகவும் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. நடிப்பு, நடனம் என அனைத்து திறமைகளும் கொண்ட இவர் தொடர்ந்து கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பையும் தவற விடாமல் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்

கால்பந்தாட்ட வீரராக
மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஆர்ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வார். இந்த நிலையில் அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார். முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்டு உருவான பிகில் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக
நன்கு தமிழ் பேசத் தெரிந்த மிகச் சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்துஜா இப்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி போலிஸ் அதிகாரியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. காக்கி படத்தைத் தொடர்ந்து மற்றும் சில படங்களில் இந்துஜா கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார்.
Recommended Video

குளிர்காலத்தில் குளுகுளு போட்டோஷூட்
இவ்வாறு படங்களில் பிஸியாக நடித்து வரும் அதே சமயம் சமூக வலைதளங்களிலும் க்யூட்டான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து கொண்டுள்ள இந்துஜா இப்பொழுது குளிர்காலத்தில் குளுகுளு போட்டோஷூட் நடத்தியுள்ளார். மஞ்சள் நிற உடையில் ஸ்டைலிஷாக உள்ள இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்குகிறது. இந்துஜா எந்த போட்டோஷூட் செய்தாலும் அதில் ஒரு தனி ரசனையுடன் பல விதமான போஸ்களை கொடுத்து இணையத்தை இருக்க பிடித்து கொள்வது எப்படி என்ற சூட்சமம் அறிந்தவர்.


Click it and Unblock the Notifications











