பச்சை நிறமே பச்சை நிறமே... நடிகை இந்துஜாவின் பச்சை பசுமையான போட்டோஷூட்!

சென்னை : படங்களில் ஹீரோவாக அதிரடி காட்டி வரும் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி படத்தில் நடித்து வருகிறார் நடிகை இந்துஜா.

ஹீரோயினாக மட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பு தோற்றத்திலும் வந்து செல்கிறார்.

பிகில் படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த இந்துஜா இப்பொழுது கடற்கரையில் பச்சை பசுமையாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மூக்குத்தி அம்மனில்

மூக்குத்தி அம்மனில்

ஆடை இயக்குனரின் அறிமுகப் படமான மேயாதமான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை இந்துஜா இப்பொழுது அனைவரும் விரும்பக் கூடிய மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக உள்ளார். ஹீரோயினியாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் சிறப்பு தோற்றத்திலும் படங்களில் தோன்றும் இவர் ஆர் ஜே பாலாஜி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மனில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக

இப்பொழுது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சத்யராஜ்,ஸ்ரீகாந்த்,ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் ஏ செந்தில்குமார் இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனி, இந்துஜா முதல் முறையாக இந்த படத்தில் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Recommended Video

நீங்க Vaccine போட்டாச்சா ? | Actress Sona | Filmibeat Tamil
பெயர் சொல்லும் அளவிற்கு

பெயர் சொல்லும் அளவிற்கு


பில்லா பாண்டி,மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இந்துஜா விஜய், அட்லி கூட்டணியில் கடைசியாக வெளியான பிகில் படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடத்திலும் கைத்தட்டல்களை பெற்றிருப்பார். வேம்பு கதாபாத்திரம் இன்றுவரை பெயர் சொல்லும் அளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளது.

பச்சை நிறமே பச்சைநிறமே

பச்சை நிறமே பச்சைநிறமே

விரைவில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வர இருக்கும் நடிகை இந்துஜா ட்ரெடிஷனல், மாடர்ன், கிளாமர் என விதவிதமாக போட்டோ ஷூட் களில் கலக்கி வருகிறார். அந்த வகையில் இப்போது கடற்கரையில் பச்சை பசுமையாக பச்சை வண்ண நிறத்தில் கண்களுக்கு குளிர்ச்சியாக ஃபோட்டோஷூட்டை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருவதோடு பச்சை நிறமே பச்சை நிறமே என பாடியும் வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X