சாவித்திரி கதையில் நடிக்க ஆசைப்பட்டேன்.. அது நடக்கவில்லை.. இந்துஜா வருத்தம்

Recommended Video

BIGG BOSS-ல SANDY MASTER தான் பிடிக்கும் : Indhuja interview

சென்னை: சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன் ஆனால் அது நடக்காமல் போனது என்று ஒரு பேட்டியின் போது இந்துஜா கூறியுள்ளார்.

நடிகை இந்துஜா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவர். இவர் கடைசியாக பிகில் படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரம் படம் முழுவதும் பயணிக்கும் அதே நேரத்தில் சிறந்த நடிப்பையும் வெளிபடுத்தி இருப்பார் இந்துஜா .

actress indhuja interview

இந்துஜா மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடிப்பை துவங்கினார் . நடித்த முதல் படத்திலே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு பேசமுடியாத காது கேக்காத பெண்ணாக மெர்குரி படத்தில் நடித்து அசத்தி இருந்தார். அதற்கு பின் சில படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் நடிகை இந்துஜா .

நடிகை இந்துஜா ரஜினியுடன் நடிப்பதுதான் எனது கனவு என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார். ரஜினியுடன் நடிப்பது பல நாயகிகளுக்கு இன்றும் கனவாக இருக்கிறது. அதே கனவு எனக்கும் இருக்கிறது. அந்த கனவு நிச்சயம் நிறைவேற வேண்டும் என்று இந்துஜா கூறினார்.

actress indhuja interview

மேலும் இந்துஜா பூமாராங் படத்தில் அதர்வா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அப்போது கடலருகே எடுக்கப்பட்ட ஒரு காட்சியின் போது கடல் மண்ணில் படுத்திருந்த பாலாஜி முகத்தில் மண்ணை வாரி போட்டு விட்டேன் என்று நகைச்சுவையுடன் கூறினார்

சாவித்திரியின் வாழ்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு முன்பே கீர்த்தி சுரேஷ் முந்தி தேசிய விருதையும் தட்டி சென்றுவிட்டார் . சாவித்திரி நல்ல நடிகை அவரின் வாழ்க்கை வரலாற்றில் நடித்திருந்தால் அது மிக பெரிய விசயமாக இருந்திருக்கும். ஆனால் என்னால் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார் .

actress indhuja interview

இந்துஜா பறக்க ஆசைப்படும் பெண் அவருக்கு சூப்பர் பவர் கிடைத்தால் கண்டிப்பாக பறப்பேன் என்றும் ஒரு முறை தெரிவித்து இருந்தார். பிகில் படத்திற்கு பிறகு பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் இந்துஜா. தற்போது காக்கி மற்றும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X