கலக்கல் போட்டோ ஷூட்டுக்கு பலன் கிடைத்து விட்டது.. தனுஷுடன் ஜோடி போடப்போகும் பிகில் பட நடிகை!

சென்னை: செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கும் படத்தில் பிகில் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். எந்த மாதிரியான கதைக்களம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

நகரத்து இளைஞர், கிராமத்து இளைஞர், கேங்ஸ்டர், அரசியல்வாதி என எப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்றாலும் எதார்த்தமான நடிப்பால் ரகளை செய்து விடுகிறார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என்றும் பிஸியாக உள்ளார் தனுஷ். இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் படங்கள் ரிலீஸ் ஆனது. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

மீண்டும் கூட்டணி

மீண்டும் கூட்டணி

இதனை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜுடன் கூட்டணி வைத்துள்ளார் தனுஷ். அந்தப் படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதேபோல் ஜகமே தந்திரம் படத்தில் சுருளி கதாப்பாத்திரம் தனக்கு பிடித்து போனதால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்குமாறு கூறியுள்ளார் தனுஷ்.

செல்வராகவனுடன் தனுஷ்

செல்வராகவனுடன் தனுஷ்

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். மேலும் தெலுங்கிலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது அண்ணனான செல்வராகவனுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற உள்ளார்.

நானே வருவேன்

நானே வருவேன்

ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களின் நடித்துள்ளார். அந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் 'நானே வருவேன்' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளனர்.

நடிகை இந்துஜா

நடிகை இந்துஜா

வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கலக்கல் போட்டோ ஷூட்

கலக்கல் போட்டோ ஷூட்

இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இந்துஜா அவ்வப்போது கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வந்தார். அதற்கு பலனாக தற்போது தனுஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இந்துஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X