“அப்படி ஒரு மோசமான விசயத்தை நான் சொல்லவேயில்லை”.. வதந்திகள் குறித்து பிகில் பட நடிகை வேதனை!
தான் கதைகள் கேட்பது குறித்து வெளியான வதந்திக்கு நடிகை இந்துஜா வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னைக் குறித்து வெளியான வதந்திக்கு நடிகை இந்துஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேயாத மான் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'பிகில்' படத்தில் இந்துஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் தற்போது நன்றாக நடிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் இந்துஜா.
இந்துஜாவுக்கு நிறைய பட வாய்ப்பு வருகின்றன. ஆனால் அவர் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், கமர்ஷியல் படங்களையே தான் விரும்புவதாகவும், விருது படங்களில் நடிக்க தயாராக இல்லை என கூறுவதாகவும் ஒரு நாளிதழில் செய்தி வெளியானது.

ஆனால். இந்தச் செய்தியை இந்துஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், " ஊடகங்கள் மிகவும் வலிமையானவை. அவை தான் சினிமாவின் முதுகெலும்பு என நான் நம்புகிறேன். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் உண்மை என்று அப்பாவி மக்கள் நம்புகிறார்கள்.
எனவே ஏதோ எழுத வேண்டுமே என பேருக்காக எழுதாதீர்கள். சினிமாவை பைத்தியக்காரத்தனமாக காதலிப்பவள் நான். நீங்கள் சொன்னது போல மோசமான ஒரு விஷயத்தை நான் சொன்னதே இல்லை. வார்த்தைகள் அதிகம் காயப்படுத்தும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











