இவ்ளோ அழகா இருந்தா என்ன பண்றது.. நடிகை இந்துஜாவின் க்யூட் பிக்ஸ் வைரல்!

சென்னை : மேயாத மான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்

விஜய்யின் பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்

கவர்ச்சி காட்டாத குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் ஃபேவரிட் நடிகையாக இருந்து வரும் நடிகை இந்துஜா கொள்ளை அழகில் கேஷுவலாக எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

கால்பந்தாட்ட வீரராக

கால்பந்தாட்ட வீரராக

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் தமிழில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வைபவ் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை இந்துஜா இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது இதனையடுத்து மெர்குரி 16 வயது மாநிறம் ,பில்லாபாண்டி பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார் . இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்த பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்து புதிய பரிமாணத்தை ரசிகர்களுக்கு கொடுத்தார்

விஜய் அட்லி கூட்டணியில்

விஜய் அட்லி கூட்டணியில்

விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை அள்ளி வருகிறது அந்த வகையில் தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் அட்லி கூட்டணியில் வெளியான பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளியானது இதில் கால்பந்தாட்ட வீரராக நடிகை இந்துஜா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். சென்டிமென்ட் காட்சிகளிலும் விளையாட்டு காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்த இந்துஜா ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்

ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி

ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி

பிகில் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து கைவசம் இப்போது தொடர்ந்து கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய் ஆண்டனி காவல்துறை அதிகாரியாக நடிக்க ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.

சூர்யாவுக்கு தங்கையாக

சூர்யாவுக்கு தங்கையாக

நந்தா,பிதாமகன் படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது . இந்த படம் முற்றிலும் வித்தியாசமான கதைக் களத்தில் உருவாக உள்ளது மேலும் இந்த படம் ஒரு அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்பதால் சூர்யாவுக்கு தங்கையாக நடிகை இந்துஜா நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக உள்ள நடிகை இந்துஜா இப்பொழுது சிம்பிளான உடையில் கொள்ளை அழகில் எடுத்த கேஷுவலான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகா இருந்தா என்ன பண்றது என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X