Indhuja: ஒரே நாள்ல தனுஷ் படத்தின் நான்கு ஷோக்கள் பார்ப்பேன்.. பார்க்கிங் நாயகி க்யூட்!

சென்னை: நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் கவனத்திற்குரிய ஹீரோவாக அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

அடுத்ததாக அவரது கேப்டன் மில்லர் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

Actress Indhuja revealed that she is a die hard fan of Actor Dhanush

அடுத்ததாக தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதியில் இந்தப் படத்தின் இசை வெளியீடும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனுஷின் ரசிகை இந்துஜா: இந்த இசை வெளியீட்டில் தனுஷின் பேச்சை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் என அடுத்தடுத்த மொழிகளில் நடித்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் தனுஷ். அவருக்கு பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். வளர்ந்துவரும் நடிகர், நடிகைகள் பலரும் தனுஷை பாராட்டி பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பார்க்கிங் படத்தில் நடித்துள்ள இந்துஜா, தான் மிகப்பெரிய தனுஷ் ஃபேன் என்று தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

தனுஷ் குறித்த ஆரூடம்: தனுஷின் முதல் படத்திலிருந்தே தனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றும் அந்த நேரத்தில் அவரை பிடிக்காதவர்கள் பலர் இருந்ததாகவும் சுட்டிக் காட்டியுள்ள இந்துஜா, அவர்களிடம் தான் தனுஷ் குறித்து பாராட்டி பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் நன்றாக நடிப்பதாகவும் ஸ்லிம்மாக இருப்பதாகவும் ஒரு கட்டத்தில் அவர் மிகப்பெரிய ஹீரோவாக மாறுவார் என்று அவரது ஆரம்ப காலகட்டத்திலேயே தான் குறிப்பிட்டதாகவும் இந்துஜா தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 4 ஷோக்கள்: தன்னுடைய கல்லூரி காலகட்டத்தில் தன்னுடைய நண்பர்களிடம் தான் இவ்வாறு பேசிய நிலையில், அதை யாரும் நம்பவில்லை என்றும் வந்துட்டாங்க தனுஷ் ஃபேன் என்று தன்னை அவர்கள் கிண்டல் செய்வார்கள் என்றும் இந்துஜா தெரிவித்துள்ளார். தன்னுடைய கல்லூரி காலகட்டத்தில் காலை, மதியம், மாலை மற்றும் இரவு என அடுத்தடுத்த தனுஷ் படங்களின் ஷோக்களை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார். அந்த அளவிற்கு தான் தனுஷ் ரசிகையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷிற்காகத்தான் சென்னை வந்தேன்: தான் சென்னைக்கு சினிமாவில் நடிக்க வந்ததும் தனுஷ் படத்தின் ஆடிஷனுக்காகத்தான் என்று கூறியுள்ள இந்துஜா, மேயாத மான் படத்தை பார்த்துவிட்டு தனுஷ் தனக்கு மிகப்பெரிய பாராட்டை தெரிவித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார். அந்த அளவிற்கு அவருடைய ரசிகையாக இருந்த தனக்கு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயமாக இருந்ததாகவும் கனவு நனவான தருணம் என்றும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X