உன் சிரிப்பது தாறுமாறு.. உன்ன அழகுல மிஞ்ச யாரு!
சென்னை: நடிகை இந்துஜா கதாநாயகி மட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார்
கடைசியாக மூக்குத்தி அம்மன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்த இவர் இப்பொழுது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார்
தனுஷ் அடுத்ததாக நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் இந்துஜா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்போது செம க்யூட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகத்தில் வைரலாகிறது.

முழுநீள திரைப்படமாக
இயக்குனர் ரத்னகுமார் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மேயாதமான் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை இந்துஜா. மது என்ற பெயரில் குறும்படமாக உருவான இந்த திரைப்படத்தை மேயாத மான் என்ற பெயரில் முழுநீள திரைப்படமாக இயக்கி அதிலும் வெற்றி இயக்குனர் ரத்னகுமார். வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா,இந்துஜா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருக்க காதல், காமெடி திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

வேம்பு கதாபாத்திரம்
மேயாத மான் வெற்றியைத் தொடர்ந்து கதாநாயகியாகவும் சிறப்பு வேடத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் என பல படங்களில் நடித்தார் . இந்த நிலையில் அட்லி, விஜய் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்து பட்டையைக் கிளப்பினார். பிகில் படத்தில் இவரது வேம்பு கதாபாத்திரம் இன்று வரை பிரபலமாகப் பேசப்படுகிறது.

சிறிய வேடத்தில்
பிகில் திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய புகழை கொடுத்ததை அடுத்து கதாநாயகியாக மட்டுமல்லாமல் சிறப்பு வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஆர்ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்து செல்வார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தனி இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி கொண்டிருக்கும் இந்துஜா காக்கி என்ற படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
Recommended Video

க்யூட் போட்டோஸ்
புதுப்பேட்டை,மயக்கம் என்ன, காதல் கொண்டேன் என நீண்ட செல்வராகவன் தனுஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள திரைப்படத்திற்கு நானே வருவேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹாரர் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை இந்துஜா சமீபத்தில் எடுத்த க்யூட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications