வில்லியாகப் போறாராமே? ஆற்றுக்குள் படுத்தபடி இது என்னங்க போஸ்? பிரபல நடிகையை விளாசும் ஃபேன்ஸ்!

By

சென்னை: நடிகை இனியா வெளியிட்டுள்ள கவர்ச்சியான போட்டோஸ் வைரலாகி வருகிறது.

பிரபல மலையாள நடிகை இனியா. தமிழில் பாடகசாலை என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அந்தப் படம் கவனிக்கப்படவில்லை. இதையடுத்து மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

வாகை சூடவா

வாகை சூடவா

இதையடுத்து 2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான வாகை சூடவா படத்தில் ஹீரோயினாக நடித்தார். சற்குணம் இயக்கிய இந்த படத்தில், பாக்யராஜ், தம்பி ராமையா, பொன்வண்ணன் உள்பட பலர் நடித்திருந்தனர். இதில் இனியாவின் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து மெளனகுரு, கண்பேசும் வார்த்தைகள், புலிவால் உள்பட பல படங்களில் நடித்தார்.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

பின்னர் ஒரு பாடலுக்கு ஆடத் தொடங்கினார். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் குக்குறு குக்குறு உள்பட சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். இதில் சில படங்களில் அவர் நடிப்பு வரவேற்பைப் பெற்றன. இருந்தாலும் பெரிய படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் தமிழ், மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நெகட்டிவ் கேரக்டர்

நெகட்டிவ் கேரக்டர்

இப்போது டிவி சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார். சன் டிவியில் வெளியாகும் கண்ணான கண்ணே என்ற டிவி தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். இதற்கிடையே அவர் தனது உடல் எடையை கொஞ்சம் குறைத்திருக்கிறார். மற்ற நடிகைகளை போல அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

ஆற்றில் படுத்தபடி

ஆற்றில் படுத்தபடி

அவர் இப்போது வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மூணாறில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு சென்றுள்ள இனியா, அங்கு, வெள்ளை நிற டிரெஸ் அணிந்து, ஓடும் ஆற்றுக்குள் படுத்தபடியும் அமர்ந்த நிலையிலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செம கிளாமராக இந்த புகைப்படங்கள் இருக்கின்றன.

எத்தனை லைக்

எத்தனை லைக்

இதற்கு கேப்ஷனாக, உங்கள் ஆத்மாவை சாந்தப்படுத்துங்கள், அதற்கு அதிக கவனம் தேவை என்று கூறியுள்ளார். இந்தப் போட்டோவுக்கு ஏராளமான ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர். ஒருவர், எத்தனை லைக் வேண்டுமானாலும் நாங்கள் போடத் தயார், நீங்கள் இதே போல போட்டோஸ் போட்டால் என்று கூறியுள்ளார்.

பிகினி போட்டோ

பிகினி போட்டோ

இன்னும் சிலர், இதை விளாசியுள்ளனர். உள்ளாடை தெரியற மாதிரி, இப்படியா டிரெஸ் போடுவீங்க? என்று திட்டியுள்ளனர். இந்த மாதிரி போட்டோ எல்லாம் போடாதீங்க என்று சிலர் கூறியுள்ளனர். பட வாய்ப்பு இல்லைன்னு இப்படி இறங்கிட்டீங்களா? என்று சில நெட்டிசன்ஸ் நக்கல் அடித்துள்ளனர். இன்னொரு ரசிகர், பிகினி போட்டோலாம் போடறதில்லையா? என்று கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X