அடேங்கப்பா.. இனியாவா இது?.. இன்னா கவர்ச்சியா போஸ் கொடுக்கறாங்க!

திருவனந்தபுரம்: தனது இனிமையான நடிப்பின் மூலம் இளைஞர்களை கொள்ளைக் கொள்ளும் கொள்ளைக்காரியாக வலம் வருபவர் நடிகை இனியா.

மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து சிறந்த நடிகை என பெயர் வாங்கிய இனியா தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.

பார்க்க மிகவும் லட்சணமாக இருக்கும் இனியா தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் பார்ப்போர் அனைவரையும் கிளுகிளுக்க வைத்துள்ளது.

சிறந்த நாயகி என நிரூபித்து

சிறந்த நாயகி என நிரூபித்து

அனைவரும் ஆச்சரியப்படும் என்றும் இளமையான நடிப்பின் மூலம் பலரும் ஏற்று நடிக்க தயங்கும் பல கதாபாத்திரங்களில் நடித்து தன்னை அடிக்கடி சிறந்த நாயகி என நிரூபித்து வரும் இனியா தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

தமிழில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வாகை சூடவா திரைப்படத்தில் ஒரு எளிமையான பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த இனியாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற வாகை சூடவா திரைப்படம் இனியாவின் திரைப்பட வாழ்வில் மிக முக்கியமான திரைப்படமாக இன்றுவரை இருந்து வருகிறது.

சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள்

சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள்

வாகை சூடவா திரைப்படத்தை தொடர்ந்து அம்மாவின் கைப்பேசி, மௌனகுரு, என்ன பல வித்தியாசமான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இனியா சென்னையில் ஒரு நாள், புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களில் பலரும் நடிக்க தயங்கும் சவாலான அதேசமயம் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை தொடர்ந்து ஆச்சரிய படுத்தி வந்தார்.

படு பயங்கரமான கவர்ச்சி

படு பயங்கரமான கவர்ச்சி

இவ்வாறு தொடர்ந்து படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலும், கவர்ச்சி இல்லாத கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த இனியா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள படு பயங்கரமான கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கவர்ச்சி ததும்பிய புகைப்படம்

கவர்ச்சி ததும்பிய புகைப்படம்

சமீபத்தில் பெண்களால் மிக பிரபலமாக எடுத்து வரும் சவால்களில் ஒன்று பெண்களுக்கு ஆதரவு பெண்களே சேலஞ்ச், இதை பல கதாநாயகிகள் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வெற்றிகரமாக சேலஞ்சை செய்து முடித்து வரும் நிலையில், நடிகை இனியாவும் தனது பங்கிற்கு நண்பர்களின் சவாலை ஏற்று கவர்ச்சி ததும்பிய புகைப்படம் ஒன்றை பிளாக் அண்ட் ஒயிட்டில் பதிவிட்டுள்ளார்.

சேலஞ்சை கவர்ச்சி பொங்க செய்து

சேலஞ்சை கவர்ச்சி பொங்க செய்து

வெறும் கருப்பு நிற மேலாடையை மட்டும் அணிந்துகொண்டு பின்னழகில் உள்ள ஸ்டார் டாட்டூவை காட்டியவாறு நின்றுகொண்டு கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதில் " இருப்பதிலேயே மிகப் பைத்தியக்காரத்தனமான உங்களின் ஒரு படைப்பாக இருங்கள் " என அதற்கு தலைப்பிட்டு பெண்களுக்கு ஆதரவு பெண்களை சேலஞ்சை கவர்ச்சி பொங்க செய்துகாட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்த இனியாவின் இந்த புகைப்படம் பலராலும் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X