Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
மலையாளத்தில் ஆபாசமாக நடிக்கிறேனா?: இனியா பாய்ச்சல்
சென்னை: தமிழில் வாகை சூடவா படத்தில், விமல் ஜோடியாக அறிமுகம் ஆனவர் இனியா. பெயருக்கு தக்கவாறே மௌன குரு, அம்மாவின் கைப்பேசி, மாசாணி மற்றும் சென்னையில் ஒரு நாள் என பல இனிய படங்களில் நடித்திருந்த போதும், சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய வாய்ப்புகள் வரவில்லை இவருக்கு.
பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் என எதுவுமே கிடைக்காததால், அம்மணியின் 'சாரக் காற்று' தற்போது கேரளா பக்கம் திரும்பியுள்ளது. மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இனியா, அங்கு மிக தாராளமாக கவர்ச்சி காட்ட இருப்பதாக வதந்திகள் நிலவி வருகின்றன.
இத்தகைய வதந்திகளை மறுத்துள்ள இனியா, இது குறித்து அளித்துள்ள விளக்கத்தில்...
அவசியமே இல்லை...
நான் மோசமாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ், மலையாள பட உலகில் என் சினிமா வாழ்க்கை நன்றாகவே போய் கொண்டு இருக்கிறது.
எப்போதும் மாட்டேன்...
ஆபாசமாக நான் நடிக்க மாட்டேன். சினிமாவில் வெற்றி பெற நெருக்கமான சீன்களில் நடிக்க வேண்டும் என்பது இல்லை.
பாடகி கேரக்டர்...
மலையாள படத்தில் பாடகி கேரக்டரில் நான் நடிக்கிறேன் ஒரு சீனில் கூட அதில் ஆபாசமாக நடிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.