கோணக்கொண்டையுடன்.. மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்த இனியா !

கொச்சி : நடிகை இனியா மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளா ஸ்டைலில் உடை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியில் மாபெரும் வெற்றி பெற்றதோடு தெலுங்கிலும் லஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது தமிழில் உருவாகி வருகிறது அதில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிகை இனியா நடித்து வருகிறார்.

ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் கிடைக்கின்ற கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்து முடித்து இன்றளவும் சினிமாவில் வெற்றியுடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை இனியா மகளிர் தினத்திற்கு கேரளா பாரம்பரிய உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மெர்சல் ஆக்கியுள்ளார்.

மார்க்கெட்டை இழந்த இனியா

மார்க்கெட்டை இழந்த இனியா

யுத்தம் செய்,பாடசாலை,வாகைசூடவா, மௌனகுரு என ஆரம்பத்தில் நடிகை இனியா நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதோடு விருதுகளையும் குவித்தது வர திடீரென சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து மார்க்கெட்டை இழந்த இனியா இன்றுவரை இழந்த இடத்தை பெற கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

அட்டகாசமான கதையில்

அட்டகாசமான கதையில்

மிகச் சிறந்த நடிகை என்றாலும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வருவதில்லை. அதனால் தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் சிறப்புத் தோற்றங்கள் என்றாலும் நடிக்க தயாராக இருக்கும் இவருக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது அட்டகாசமான கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பெண்களை மையப்படுத்தி

பெண்களை மையப்படுத்தி

ஹிந்தியில் பெண்களை மையப்படுத்தி வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் மாபெரும் வெற்றி பெற்றதற்கு இணையாக சர்ச்சைகளிலும் சிக்கியிருக்க இந்த படம் சமீபத்தில் தெலுங்கில் பிட்ட கதாலு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி பலரையும் கவர்ந்தது. தமிழிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியானது. மேலும் லஸ்ட் ஸ்டோரிஸ் இப்பொழுது தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

மகளிர் தின கேரளா ஸ்டைல்

மகளிர் தின கேரளா ஸ்டைல்

இதில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிகை இனியா லீட் ரோலில் நடிக்க இவரை தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தா, சோனியா அகர்வால் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மகளிர் தினம் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டதால் திரைப்பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருக்க நடிகை இனியா கேரளாவின் பாரம்பரிய வெள்ளை நிற ஆடையை அணிந்துகொண்டு லைட் வெளிச்சத்தில் ஜிலேபி கொண்டையைக் காட்டி அழகோ அழகாக இருக்கும் இனியாவின் இந்த மகளிர் தின கேரளா ஸ்டைல் போட்டோவை பார்த்த ரசிகர்கள் உருகிப் போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X