கேரளா சாரீ..ஜிலேபி கொண்டை.. இனியாவின் கலக்கல் பிக்ஸ்..கவிதையால் வர்ணிக்கும் ரசிகர்!
திருவனந்தபுரம் : தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற வாகை சூடவா திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் அன்பை பெற்றவர் நடிகை இனியா.
கேரளாவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான ஓணம் நேற்று கொரானா நோய்த்தொற்றின் அச்சத்திற்கு மத்தியிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மலையாள திரையுலகைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது பாரம்பரிய கேரளா புத்தாடையை அணிந்து அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் நடிகை இனியா ஜிலேபி கொண்டையுடன் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து மெய் மறக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாடகசாலை
சிறந்த நடிகை என பல்வேறு விருதுகளை பெற்றுள்ள நடிகை இனியா தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கண்முன் கொண்டுவரும் திறமைமிக்க நடிகையான இனியா தமிழில் "பாடகசாலை" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

தேசிய விருது
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் இனியா இயக்குனர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பல்வேறு விருதுகளை வென்று வந்த நிலையில் இந்த திரைப்படம் சிறந்த திரைப்படம் என தேசிய விருதும் கொடுத்து அங்கீகரிக்கப்பட்டது.

தரமான திரைப்படங்களில்
வாகைசூடவா வெற்றிக்கு பிறகு பல்வேறு திரைப்படங்களில் பலரும் தயங்கும் கதாபாத்திரங்களில் துணிந்து நடித்து வரும் இனியா மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, புலிவால், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அசத்தலான லுக்கில்
நேற்று கேரளாவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொரானா நோய்த்தொற்றின் அச்சத்திற்கு மத்தியிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மலையாள திரையுலகைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது பாரம்பரிய கேரளா புத்தாடையை அணிந்து சமூக வலைதளங்களில் அந்தப் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் கேரளா சேலையில் அசத்தலான லுக்கில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.

காதல் கவிதை
இந்நிலையில் நடிகை இனியா ஜிலேபி கொண்டையுடன் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து மெய் மறந்து படுத்தவாறு தனித்துவமான அசத்தலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணித்து வரும் நிலையில், தமிழ் ரசிகர் ஒருவர் ரன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் வரிகளான " அழகிய திமிருடன் இருவிழி என்னை பார்க்குதே" என்ற காதல் கவிதை வரிகளை ரொமான்டிக்காக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











