கணவருக்கும் பேஷியல் செய்து அழகு பார்த்த இஷிதா தத்தா.. வைரலாகும் புகைப்படம் !
மும்பை : துடிப்பான நடிப்பு அளவில்லாத அழகு என தனது நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் இஷிதா தத்தா.
தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வரும் இஷிதா தத்தா இன்ஸ்டாகிராமில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதைப்பார்த்த இவரது ரசிகர்கள் இப்படி பண்ணிட்டீங்களே இஷிதா என கேட்டு வருகின்றனர்.

இஷிதா தத்தா
தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் நம் அனைவருக்கும் அறிமுகமான தனுஸ்ரீ தத்தாவின் தங்கையான இஷிதா தத்தா தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

சாணக்யடு
தன்னுடன் நடித்த வட்ஷல் சேத் என்பவரை காதலித்து வந்த இவர் 2017ஆம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தெலுங்கில் சாணக்யடு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து கன்னடா மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிப்பு வேட்டையை ஆரம்பித்து வெற்றிகரமாக வலம் வருகிறார்.

லாக்டவுன்
துடிப்பான நடிப்பு அளவில்லாத அழகு என தனது நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் இஷிதா தத்தா. தற்பொழுது லாக்டவுன் சமயத்தில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்து வருகிறார்.

ரசிகர்கள் கூட்டம்
மேலும் அவ்வப்போது தனது கணவர் வட்ஷல் சேத்-துடன் பல ஃபன்னி வீடியோக்களையும் செய்து தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இஷிதா தத்தாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனது.

வழக்கமாக
அழகான முகம் அசத்தலான உடலமைப்பு என பார்க்கவே அம்சமாக இருக்கும் இஷிதா தத்தா தனது கவர்ச்சி படங்களையும் யோகா செய்யும் புகைப் படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது வழக்கமாக கொண்டிருக்கிறார்.

காமெடி வீடியோக்களை
இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு பேஷியல் புகைப்படம் ஒன்று அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. பொதுவாக இவர் தனது கணவர் வட்ஷல் சேத் உடன் நடித்த காமெடி வீடியோக்களை பகிர்ந்து வந்த இவர் தற்போது அவருக்கு பேஷியல் பேக்கையும் போட்டு விட்டுள்ளார்.

முகத்திலும் போட்டு
பெண்கள் தங்களை நாளுக்குநாள் மெருகேற்றிக் கொள்ள பேஸ்பேக் போன்ற அழகு சாதனங்களை பயன்படுத்தி தன்னை தானே மெருகேற்றி கொள்வார்கள். பொதுவாக இது எல்லாம் அழகு சாதன நிலையங்கள் நிலையங்களில் மட்டுமே செய்துவரும் நிலையில் தற்போதுள்ள லாக்டவுன் சூழலில் அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் இவர் வீட்டிலேயே பேஸ்பேக் ரெடி செய்து தன் முகத்தில் போட்டது மட்டுமில்லாமல் தனது கணவர் முகத்திலும் போட்டு விட்டு அழகு பார்த்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில்
கணவர் என்றும் பாராமல் அவரது முகத்தில் பேஸ்பேக்கை போட்டு விட்டது மட்டுமல்லாமல் அதை போட்டோ எடுத்து எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் க்யூட் கப்புல் என வர்ணித்து வரும் வேளையில் சிலர் இப்படி பண்ணிட்டீங்களே இஷிதா என்றவாறு நீங்கள் இருவரும் ஏதாவது பேய் படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றீர்களா என இந்த கப்புலை கலாய்த்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











