செல்லத்த இருக்கமாக கட்டி அனைத்து புரளும் தனுஷ் பட நடிகை!

சென்னை: மலையாள சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழுக்கு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்பொழுது மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியன் செல்வனில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய செல்ல நாய்க்குட்டி உடன் கட்டிப் புரளும் க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை

ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை

மலையாள சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. அப்பேர்ப்பட்ட மலையாள சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டுள்ளவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தமிழ் சினிமாவிற்கு ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அறிமுகமான இவர் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை.

இலங்கை தமிழ் பெண்ணாக

இலங்கை தமிழ் பெண்ணாக

இந்த நிலையில் தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் தரத்தில் உருவான இந்த திரைப்படம் பெரும்பாலும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி இலங்கை தமிழ் பெண்ணாக நடித்திருந்தார். ஜகமே தந்திரம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில்

பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியன் செல்வன் விறுவிறு வேகத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்று வருகிறது. மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் இத்திரைப்படம் உருவாகி வர இதில் முக்கிய வேடத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்துள்ளார். பொன்னியன் செல்வனில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Bigg Boss 5 ல Priyanka தான் Fun | Sunitha Gogoi Excluisive | Filmibeat Tamil
செல்லத்தை இறுக்கமாக கட்டி அனைத்து

செல்லத்தை இறுக்கமாக கட்டி அனைத்து

அசாத்தியமான கதைகளை தொடர்ந்து இயக்கி வெற்றி பெற்று வரும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் டெடி வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆர்யாவுடன் கூட்டணி அமைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். சயின்டிஃபிக் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. மலையாளத்தை போலவே தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து தனி இடத்தை பெற்று வரும் ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது தான் செல்லமாக வளர்த்து வரும் நாயுடன் அன்பாக கட்டி புரளும் க்யூட் புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X