Don't Miss!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தங்கத்தாமரை மகளே.. ஐஸ்வர்யா மேனன் தங்க சிலை போல ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள்!
சென்னை : தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்
ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்ததை தொடர்ந்து இப்பொழுது தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிகிறது
அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருக விடும் ஐஸ்வர்யா மேனன் தங்க சிலை போல ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
அதுக்கு
கன்டிஷன்
போட்டு
தான்
நடித்தேன்...ஓப்பனாக
பேட்டியளித்த
ஜெய்பீம்
நடிகர்

வெற்றிகரமான கதாநாயகியாக
இப்பொழுது முன்னணி நடிகைகளாக உள்ள பலரும் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர்கள். அந்த வகையில் இப்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனனும் ஆரம்பத்தில் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இப்போது கதாநாயகியாக முன்னேறி உள்ளார். அந்த வகையில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றவர் ஐஸ்வர்யா மேனன். பின் கதாநாயகி வாய்ப்பு கிடைத்து வெற்றிகரமான கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளார்

கோபம் வந்தால் சிரிக்கும்
கிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரா படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான இவருக்கு அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து வெளியான தமிழ் படம் 2லும் கதாநாயகியாக நடித்தார். இந்த நிலையில் இசையமைப்பாளராக இருந்து இப்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி வித்தியாசமான ரோலில் நடித்த நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆகியுள்ளார். அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் கோபம் வந்தால் சிரிக்கும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட இளைஞராக ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் நடிப்பு நடனம் கவர்ச்சி என அனைத்திலும் பட்டையை கிளப்பியிருப்பார்.

நான் சிரித்தால்
பார்க்கப் பார்க்க திகட்டாத கவர்ச்சியால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வரும் ஐஸ்வர்யா மேனனுக்கு இப்பொழுது தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நான் சிரித்தால் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்ததை தொடர்ந்து இப்பொழுது தெலுங்கு இளம் நடிகர் நிகில் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

தங்கத் தாமரை மகளே
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்ற மாதம் தொடங்கப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஐஸ்வர்யா மேனன் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக உள்ளார். இவ்வாறு பல மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புயலாக மாறி போட்டோக்களை தெறிக்க விடுகிறார் . இந்த நிலையில் கவர்ச்சி இல்லாத தங்க சிலை போல ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் எப்போது பகிர்ந்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் தங்கத் தாமரை மகளே என வர்ணித்து வருகின்றனர்.