வாழ்த்து மழையில் ஐஸ்வர்யா ராஜேஷ்...2022 நிறைய பிளான்ஸ் இருக்கு
சென்னை: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் பல நடிகர்கள் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது பிறந்த நாளான இன்று பிரபல கதாநாயகிகள் மற்றும் கதாநாயகர்கள் இவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவின் ஆரம்பம்:
தொடக்கத்தில் ஒரு டிவி தொகுப்பாளராக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் அதன்பின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அட்டக்கத்தி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர், அதன் பின் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும், ரம்மி போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். பின்னர் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான அங்கீகாரத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார்.

முன்னணி இயக்குனர்களின் படங்களில்:
மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் தனுஷுடனும் ஜோடி சேர்ந்து நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். மேலும் மலையாளத்தில் துல்கர் சல்மானுடனும் இணைந்து நடித்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆர்வம் இருக்கும் அதன்படி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கனா படத்தில் பெண் கிரிக்கெட் வீரராக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது தோழி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். மேலும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் மக்கள் செல்வி என்ற அனைவராலும் அழைக்கப்படும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விமர்சகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.டிரைவர் ஜமுனா என்ற படத்தின் தயாரிப்பாளர் "18 ரீலிஸ் " சவுத்ரி அவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ஒரு வித்தியாசமான படத்தை எடுத்து வருகிறார். இன்று பிறந்த நாள் என்பதால் அவரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.விரைவில் டிரைவர் ஜமுனா இந்த ஆண்டு 2022 வெளிவர இருக்கிறது.
Recommended Video

2022 அடுத்த பிளானஸ்
நடிகர் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளப் படத்தின் ரீமேக் ஆன "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்திலும் "டிரைவர் ஜமுனா" என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இவை அனைத்தையும் தவிர சிலபல ஓடிடி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பலரும் சொல்லி வருகின்றனர். விரைவில் வித்தியாசமான வெப் தொடர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் காணப்படுவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











