காஷ்மீர் ப்யூட்டிபுல் காஷ்மீர்... நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காஷ்மீரில் இன்பச்சுற்றுலா!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளவர்
ஹீரோவுடன் ஜோடி போட்டு நடிக்கும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் பட்டையை கிளப்புகிறார்
அவ்வாறு டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன்,மோகன்தாஸ், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா இப்பொழுது காஷ்மீரில் இன்பச் சுற்றுலா சென்றுள்ள அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்

நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்க ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு காக்கா முட்டை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று தந்தது. நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் அனைவரையும் அசர வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது தமிழில் அசைக்கமுடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்
படத்திற்கு படம் ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான நடிப்பை பார்த்து அனைவரும் பிரமித்துப் போக முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக நடிப்பின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்த க பெ ரணசிங்கம் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பாராட்டாதவர்களே யாரும் இருக்க முடியாது. க பெ ரணசிங்கம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தி கிரேட் இந்தியன் கிச்சன்
அந்த வரிசையில் வெளியான திட்டம் 2 மற்றும் பூமிகா உள்ளிட்ட திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இப்பொழுது டிரைவர் ஜமுனா மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் தமிழ் ரீமேக்கை இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கி வருகிறார். ராகுல் ரவிச்சந்திரன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

காஷ்மீர் ப்யூட்டிபுல் காஷ்மீர்
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் குறிப்பாக தெலுங்கில் இவருக்கு அதிக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் காஷ்மீருக்கு இன்பச் சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த அழகிய புகைப்படங்களை இப்பொழுது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என ஆனந்தமாய் பாடியவாறு எடுத்த இந்த அழகிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











