பட்டு சேலையில் அம்சமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக மாறி வருகிறார்

Recommended Video

முழுக்க முழுக்க CAR ஐ மையப்படுத்திய படம் | Actress Aishwarya Rajesh Exclusive | Filmibeat Tamil

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் நானி நடிப்பில் வெளியான டக் ஜகதீஷ் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்

மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது பட்டு சேலையில் அம்சமாக இருக்கும் அழகிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து

விஜய் சேதுபதியுடன் இணைந்து

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் தனித்துவமாக வெளியாகி வெற்றி பெற்று வருகிறது. ரம்மி, தர்மதுரை ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க. பெ. ரணசிங்கம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது

பல மொழிகளில் வாய்ப்புகள் குவிகிறது

பல மொழிகளில் வாய்ப்புகள் குவிகிறது

ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் தராமல் கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருவதால் இவருக்கு பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிகிறது. அந்தவகையில் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான டக் ஜெகதீஷ் என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

திட்டம் 2

திட்டம் 2

முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் அதே சமயம் தங்கை உள்ளிட்ட சிறு கதாபாத்திரங்களிலும் தயங்காமல் நடித்து வரும் இவர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளையில் நடித்திருந்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு க. பெ. ரணசிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த நிலையில் அதைத் தொடர்ந்து வெளியான திட்டம் 2 மற்றும் பூமிகா உள்ளிட்ட படங்களும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது

பட்டு சேலையில் அம்சமாக

பட்டு சேலையில் அம்சமாக

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக ராகுல் ரவிச்சந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தனித்துவமான கதைகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது பட்டு சேலையில் அம்சமாக கொள்ளை அழகில் உள்ள அழகிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் நானி நடிப்பில் வெளியான டக் ஜகதீஷ் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X