லிப் ஸ்டிக் போட்டு.. சட்டையை கழட்டி விட்டு.. ஓவர் அலப்பறை கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!
சென்னை : நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராமில் சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குள் குவிந்து வருகின்றன.
சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில நடிக்கத் தொடங்கினார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நான் சிரித்தால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன்
க்யூட்டான நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், 2012ம் ஆண்டு முதல் சினிமாவில் தனக்கான ஒரு நிலையான இடத்தைப்பிடிக்க போராடி வருகிறார். வீரா,தமிழ்படம்2, நான் சிரித்தால், வீழம் என அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்களால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

எடுபடவில்லை
ஐஸ்வர்யா மேனன் தமிழில் கடைசியாக அசோக் செல்வனுடன் வீழம் படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான, க்ரைம், த்ரில்லர் பாணியில் உருவான இந்த படம் விறுவிறுப்பாக இருந்த போதும், திரையேட்டரில் ஆடியன்சின் மனதை கவராமல் தோல்வி அடைந்தது., அதன் பின், நேரடியாக ஓடிடி சோனி லிவ்வில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

இனி சட்டையே வேண்டாம்
தற்போது, படவாய்ப்பு இல்லாததால், சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இணையத்தில் அவ்வப்போது ஓவர் கவர்ச்சியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அலப்பறை கொடுத்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன், தற்போது இவர்,ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டு சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

படாதபாடுபடும் நடிகை
அழகும் திறமையும் இருந்த போதும் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் கதாபாத்திரம் கிடைக்காத்தால், எப்படியாவது படவாய்ப்பை பெற்று ஒரு நல்ல நடிகை என பெயர் எடுக்க படாதபாடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா மேனன். ஆனால் அம்மணிக்கு படவாய்ப்பு வராததால் இணைமே கதி என இருக்கிறார். அம்மணிக்கு எப்படியாவது படவாய்ப்பு வரவேண்டும் என் ரசிகர்கள் இவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











