காட்டு ராணி கெட்டப்பில் பாறையில் படுத்து போஸ் கொடுக்கும்... ஹிப்ஹாப் ஆதி ஜோடி!

சென்னை : அறிமுக இயக்குனரான இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் சமீபத்தில் வெளியான நான் சிரித்தால் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடித்திருப்பார்.

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் இப்பொழுது நடிகையாக அவதாரம் எடுத்து இருக்க வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

கன்னடம், தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை பெருமளவு கொண்டுள்ள ஐஸ்வர்யா இப்பொழுது பார்க்க காட்டு ராணி போலவே வித்தியாசமான உடையில் பாறையின் மீது படுத்துக்கொண்டு ஹாயாக காத்து வாங்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு

காதலர் தினத்தை முன்னிட்டு

மீசைய முறுக்கு, நட்பே துணை என இரண்டு வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக தான் அறிமுகம் செய்யப்பட்டார். அந்நிலையில் அறிமுக இயக்குனரான ராணா இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான காமெடி கதையில் வெளியான நான் சிரித்தால் கடந்த வருடம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதில் கதாநாயகியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தவர் ஐஸ்வர்யா மேனன்.

சிறிய கதாபாத்திரத்தில்

சிறிய கதாபாத்திரத்தில்

தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தென்னிந்தியாவில் நடித்து வர இவருக்கு முதல் முறையாக காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது.

அனைவருக்கும் பரிச்சயமான

அனைவருக்கும் பரிச்சயமான

ஆப்பிள் பெண்ணே மற்றும் வீரா ஆகிய திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிய ஐஸ்வர்யா மேனன் நான் சிரித்தால் படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நிலையில் இப்பொழுது முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடக்க உள்ளதாக சில தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

பட்டாம்பூச்சி நெத்திச்சுட்டி

பட்டாம்பூச்சி நெத்திச்சுட்டி

பட வாய்ப்புகள் இல்லாத போதும் ரசிகர்களின் அன்பை மழைபோல நம்பி இருக்கும் ஐஸ்வர்யா அவர்களுக்காக சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்க இப்பொழுது நடுக்காட்டில் காட்டு ராணி போல பட்டாம்பூச்சி நெத்திச்சுட்டியுடன் முண்டா பனியன் உடன் நைட் டிரஸ்ஸில் சாவகாசமாக பாறையின் மீது படுத்துக்கொண்டு திகட்டாத முன்னழகு அப்பட்டமாய் தெரிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சியால் குளிப்பாட்டி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X