வெண்கலச் சிலையே... சமந்தாவின் சாயலே... ஹீரோயினை ஓவராகப் புகழும் ரசிகர்கள்... வைரலாகும் போட்டோ
சென்னை: வெண்கலச் சிலையே, நடிகை சமந்தாவின் சாயலே என்று ஹீரோயினை புகழும் ரசிகர்கள், அவரது புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
தமிழில், காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, நேர் எதிர், ஆப்பிள் பெண்ணே, வீரா படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன்.
இப்போது, ஹிப் ஹாப் ஆதி நடிக்கும், நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் கே.எஸ்.ரவிகுமார், படவா கோபி, பாண்டியராஜன், முனிஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.
போட்டோ
குஷ்புவின் அவினி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படம், பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகிறது. ராணா இயக்கியுள்ளார்.
இதற்கிடையே, ஐஸ்வர்யா மேனன், தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.
View this post on InstagramThis picture definitely deserves an individual post , not just a grid 🔥 .. 📷 @prachuprashanth
A post shared by Iswarya Menon (@iswarya.menon) on
வெண்கலைச் சிலை
அதற்கு கீழே கமென்ட்களையும் போட்டுள்ளனர். அதில் வெண்கலைச் சிலை போல அப்படியே இருக்கிறீர்கள். உங்கள் கலரும் பின்னணி வண்ணமும் அப்படித்தான் இருக்கிறது என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

உங்களுக்காகவே
வேறொரு ரசிகர், நான் உங்களின் தீவிர ரசிகன். உங்களுக்காக மட்டுமே 'நான் சிரித்தால்' படம் ஓடப்போகிறது, இது உண்மை என்று சத்தியம் செய்யாத குறையாகக் கூறியுள்ளார்.

சமந்தா சாயல்
மற்றொரு ரசிகர், உங்களிடம் நடிகை சமந்தாவின் சாயல் தெரிகிறது என்று கண்டுபிடித்து தெரிவித்துள்ளார். வில்லங்க ரசிகர் ஒருவரோ, இதே டிரஸ்ல எத்தனை போட்டோதான் போடுவீங்க? என்று எரிச்சலாகக் கேட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











