கையில் குட்டி ஆமை..ஐஸ்வர்யா மேனனின் ட்ரெண்டிங் பிக்ஸ் !
சென்னை : நடிகை ஐஸ்வர்யா மேனன் கையில் ஆமையுடன் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவில் கடுமையான உழைப்புடன் பல திரைப்படங்களில் நடித்து பல ஹீரோயின்கள் பிரபலமாகியுள்ளனர் ஆனாலும் அவர்களில் சிலரின் பெயர் கூட பலருக்கு தெரியாமல் இருக்கும்.

ஆனால் இப்போதோ ஒரு சில படம் நடித்தால் கூட சமூக வலைதளத்தின் மூலம் பல ஹீரோயின்கள் பிரபலமாகின்றனர். அதில் "நான் சிரித்தால்" பட ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். தமிழ் படம் 2, வீரா போன்ற சில படங்களில் நடித்தாலும் அவர் அவ்வளவு பிரபலமாக வில்லை.
சமீபத்தில், ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளியான "நான் சிரித்தால்" படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்திருப்பார் இந்த படத்தின் மூலமே இவர், பலருக்கும் தெரிந்த முகமானார். எப்போது, இணையத்தில் ஆர்வமாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்புக்கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையுடன் இவர் எடுத்த போட்டோ ஷூட் செம ட்ரெண்டானது. இந்த , புகைப்படத்தில் சேலையில் மிகவும் கிளமராக போஸ் கொடுத்து இருப்பார். அந்த போட்டோவை வைத்து பல மீம்ஸ்கல் போடப்பட்டன. இதனால் பலரின் கவனம் அவரின் பக்கம் திரும்பியது.

இந்நிலையில் தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், கறுப்பு நிற ஆடையில், அழகான லூஸ் ஹேருடன் கையில் ஒரு குட்டி ஆமையை பிடித்துக்கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா மேனன். அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் இயல்பாக அழகாக இருக்கிறது. இதைப்பார்த்த, நெட்டிசன்களும் பல கருத்தக்களை பதிவிட்டு, பல லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதற்கு முன் இவர், சேலையில் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டானது அதேப்போல இந்த புகைப்படமும் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் சேலை அணியவில்லை என்றாலும் மாடர்ன் டிரெஸ் இவருக்கு மிகவும் அழகாக பொருந்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











