ஸ்லீவ்லெஸ் சேலையில் மனதை வருடும் ஐஸ்வர்யா மேனன்!

சென்னை : வீரா,தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களை தனது அதீத கவர்ச்சியின் மூலம் திண்டாட விட்டு வரும் இவர் இப்பொழுது ஸ்லீவ்லெஸ் சேலையில் மனதை வருடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் ஆரம்பத்தில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் காதலில் சொதப்புவது எப்படி,ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் ஆங்காங்கே வந்து சென்ற இவர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக வீரா படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

மிகச் சிறப்பான நடிப்பை

மிகச் சிறப்பான நடிப்பை

மிர்ச்சி சிவாவின் நடிப்பில் வெளியான தமிழ் படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக தமிழ் படம் 2 வெளியானது. அந்த படத்தையும் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கியிருந்தார். தமிழ் படம் 2ல் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யா அதில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

அனைத்திலும் தாராளம் காட்டி

அனைத்திலும் தாராளம் காட்டி

இசையமைப்பாளராக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இப்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். ஐஸ்வர்யா மேனன். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியாகாத வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான நான் சிரித்தால் படத்தில் நடிப்பு, கலக்கலான நடனம், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் தாராளம் காட்டியிருப்பார்.

Recommended Video

நான் காதலித்த ஒரே நடிகர் | Actress Aishwarya Exclusive | Filmibeat Tamil
தெலுங்கு நடிகர் நிகில் ஜோடியாக

தெலுங்கு நடிகர் நிகில் ஜோடியாக

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் இப்போது தெலுங்கு இளம் நடிகர் நிகில் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் ஐஸ்வர்யா மேனன் ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டுள்ளார்.

ஸ்லீவ்லெஸ் சேலையில்

ஸ்லீவ்லெஸ் சேலையில்

இவ்வாறு பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் அதே சமயம் சமூக வலைதளங்களில் அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை திணறடிக்கும் இவர் எப்பொழுது ஸ்லீவ்லெஸ் சேலையில் மனதை வருடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X