Actress Ivana: லைட்டிங்கை காட்டிலும் ஜொலிக்கும் இவானா.. அதைவிட வெட்கம் மாஸ் கூட்டுதே!
சென்னை: நாச்சியார் என்ற படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் இவானா. தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
முன்னதாக கடந்த 2012ம் ஆண்டில் வெளியான மாஸ்டர்ஸ் என்ற படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமான இவானா, அடுத்தடுத்து இரு மலையாளப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

சமீபத்தில் ஹரீஷ் கல்யாணுடன் இவர் நடித்திருந்த எல்ஜிஎம் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்திருந்தார்.
நடிகை இவானா: நடிகை இவானா மலையாள படங்கள்மூலமே தன்னுடைய என்ட்ரியை சினிமாவில் கொடுத்திருந்தார். கடந்த 2012ம் ஆண்டில் வெளியான மாஸ்டர்ஸ் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமான இவானா, அடுத்தடுத்த இரு மலையாளப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். அனுராகா காரிக்கின் வெல்லம் என்ற படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து தமிழில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நாச்சியார் என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
நாச்சியார் படத்தில் என்ட்ரி: பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியானது நாச்சியார். ஆனால் லவ் டுடே என்ற படத்தில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடித்ததன்மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்டார். இந்தப் படத்தில் நிகிதா என்ற இவரது கேரக்டர் இவானாவிற்கு அதிகமான வரவேற்பை தமிழில் பெற்றுத் தந்தது. தொடர்ந்து எல்ஜிஎம் படத்தில் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தை தோனி தயாரித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: கவர்ச்சிக்கு நோ சொல்லி டீசண்டான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவானா. அலீனா ஷாஜி என்ற இயற்பெயரை சினிமாவிற்காக இவானா என்று மாற்றிக் கொண்டுள்ள இவானா, இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்து சிறப்பான போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

புதிய போட்டோஷுட்: அந்த வகையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் அவுட்பிட்டில் கலக்கலான போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே இந்த புகைப்படம் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களில் லைட்டிங் உள்ளிட்டவை அவரது உடைக்கு மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளது. வித்தியாசமான ஹேர்ஸ்டைல் கலக்கலான போஸ்களை இந்தப் புகைப்படங்களில் கொடுத்துள்ளார். வெட்கத்தையும் ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளார்.
தோற்றம் குறித்த விமர்சனம்: முன்னதாக ஒல்லியாக குள்ளமாக இருப்பதாக தன்மீது விமர்சனங்கள் எழுந்ததாகவும் படத்தில் கமிட்டான பின்பு அதிலிருந்து நீக்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாகவும் இவானா தனது சமீபத்திய பேட்டியில் வருத்தம் தெரிவித்திருந்தார். முன்னதாக இதுகுறித்து வருத்தம் ஏற்பட்டதாகவும் தற்போது அதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து வெற்றியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் இவானா குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











