ஒரு பாடலுக்கு ஆட்டம் போட ரூ. 2 கோடி.. போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சிகாட்டிய பிரபல நடிகை!
Recommended Video
மும்பை: சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சாஹோ. 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கிறது.
இந்தப்படம் 30ஆம் தேதியான நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
அந்த வகையில் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, சாஹோ படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரபாசுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

கவர்ச்சி வேண்டும்
இதுதொடர்பாக படக்குழு ஜாக்குலின் உடன் பேசியுள்ளனர். அப்போது அந்த பாடலுக்கு படுகவர்ச்சியாக ஆட வேண்டும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படக்குழு சம்மதம்
இதனைக்கேட்ட ஜாக்குலின் அப்படியானால், 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். படக்குழுவும் 2 கோடி ரூபாய் கொடுக்க சம்மதித்துள்ளது.

கவர்ச்சியில் தாராளம்
இந்நிலையில் படம் நாளை ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில் பேட் பாய் எனத் தொடங்கும் அந்த பாடலில் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறாராம் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.


Click it and Unblock the Notifications











