அந்த கண்ண பாத்தாக்கா... காந்தப் பார்வையால் இளசுகளை கட்டியிழுக்கும் ஜனனி!

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜனனி.

நடிகர் பரத்துடன் முன்னறிவான், யாக்கை திரி என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பிரபுதேவாவின் பாஹீரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஜனனி இப்போது காந்தப் பார்வை யால் இளசு களை கட்டி இழுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாகி வருகிறார்

காமெடி கலந்த துறுதுறுப்பான பெண்ணாக

காமெடி கலந்த துறுதுறுப்பான பெண்ணாக

ஆரம்பத்தில் பெரிதாக அறிமுகம் இல்லாத சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஜனனி பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். முதல் திரைப்படத்திலேயே காமெடி கலந்த துறுதுறுப்பான பெண்ணாக நடித்து மிகச் சிறந்த நடிகை என பெயர் பெற்ற ஜனனிக்கு அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் வெற்றிகளை பெற்றுத்தந்தது.

மலையாளத்திலும் சில படங்களில்

மலையாளத்திலும் சில படங்களில்

அசோக் செல்வனுக்கு ஜோடியாக தெகிடி திரைப்படத்தில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இப்பொழுது தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தைக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் ஜனனி மலையாளத்திலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.

இறுதி சுற்று வரை சென்று

இறுதி சுற்று வரை சென்று

யாரும் சற்றும் எதிர்பார்க்காத சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி இறுதி சுற்று வரை சென்ற இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் ஏராளமாக அதிகமாக உள்ளனர்.

ஆரம்ப கட்ட பணிகள்

ஆரம்ப கட்ட பணிகள்

தெகிடி வெற்றிக்கு பிறகு அசோக் செல்வன் ஜனனி கூட்டணி மீண்டும் இணைந்து வேழம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்பொழுது பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது அதன்பிறகு இப்படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

பரத்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில்

பரத்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில்

தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி வெற்றிகரமாக அடுத்தடுத்த நல்ல கதைகளில் நடித்து வரும் நடிகர் பரத்துடன் இணைந்து முன்னறிவான் மற்றும் யாக்கை திரி என அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜனனி ஜோடியாக நடித்து வருகிறார்.

அந்த கண்ண பாத்தாக்கா

அந்த கண்ண பாத்தாக்கா

அதேசமயம் பிரபுதேவாவின் பாஹீரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஜனனி சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது காந்த பார்வையால் ரசிகர்களை மயங்க வைக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X