நடிகை ஜனனியா இது.. ஹாலிவுட் ஹீரோயின் போல ஆளே அடையாளம் தெரியாமல் செம ஸ்டைலிஷா மாறிவிட்டாரே!
சென்னை: நடிகை ஜனனி பரத்துடன் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தெகிடி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அசோக் செல்வன் ஜனனி கூட்டணி வேழம் என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள ஜனனி இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள த்ரோபேக் புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயுள்ளார்.

கவர்ச்சி காட்டாத நடிப்பு
அனைவரும் ரசிக்கின்ற அழகு கவர்ச்சி காட்டாத நடிப்பு என தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை ஜனனி. பெரிதாக வெற்றி படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் அசோக்செல்வன் உடன் இணைந்து நடித்த தெகிடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

அசோக் செல்வன் கூட்டணியில்
தெகிடி வெற்றியை தொடர்ந்து மீண்டும் அசோக் செல்வன் உடன் இணைந்து இப்பொழுது வேழம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வேழம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது வெளியிடப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜனனிக்கு அதன்பிறகு ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

8 கதாநாயகிகளில் ஒருவராக
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ள பஹீராவில் 8 கதாநாயகிகளில் ஒருவராக ஜனனி நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிக விரைவிலேயே திரையில் வெளியாக உள்ளது பல்வேறு கெட்டப்புகளில் பிரபுதேவா இந்த படத்தில் அசத்தி இருக்க ஜனனி பிரபுதேவாவுக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்து இரண்டு படங்களில்
யாக்கை திரி மற்றும் முன்னறிவான் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் பரத்துடன் இணைந்து நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இப்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ள ஜனனி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
Recommended Video

ஹாலிவுட் ஹீரோயின் போல ஆளே மாறிவிட்டார்
சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கின்ற போதும் முகம் சுளிக்கும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை இவர் பதிவிடுவது இல்லை. இந்த நிலையில் இப்பொழுது த்ரோபேக் புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூலிங் கிளாஸ் உடன் பார்க்க ஹாலிவுட் ஹீரோயின் போல ஆளே டோட்டலாக மாறியுள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











