புது ஹேர்ஸ்டைலில் கலக்கும் ஜனனி ஐயர்.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : தமிழ் சினிமாவில் உள்ள க்யூட்டான நடிகைகளில் மிகவும் திறமையான நடிகை ஜனனி ஐயர்.

நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் ஒரு சில பாடல்களை திரைப்படங்களில் பாடியுள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகெங்கிலும் உள்ள பல கோடி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.

தெகிடி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அசோக் செல்வன் உடன் ஜோடி சேர்ந்து வேழம் திரைப்படத்தில் நடித்து வரும் ஜனனி ஐயர் இப்பொழுது புது ஹேர்ஸ்டைலில் ஆளே டோட்டலாக மாறியுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பாடகியாகவும்

பாடகியாகவும்

நடிகையாக பலத் திரைப்படங்களில் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த ஜனனி ஐயர் விதி மதி உல்டா என்ற திரைப்படத்தில் உன் நெருக்கம் என்ற பாடலை பாடி பாடகியாகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாசமான வேடங்களில் வந்து கலக்கி வரும் ஜனனி ஐயர் முதன்முறையாக அறிமுகமான அவன் இவன் திரைப்படத்தில் ஆரவாரமில்லாத செம க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே செமயாக ஸ்கோர் செய்து இருப்பார்.

பிளாக்பஸ்டர் வெற்றி

பிளாக்பஸ்டர் வெற்றி

பாலாவின் இயக்கத்தில் வெளியான "அவன் இவன்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இதில் ஜனனி ஐயரின் நடிப்பும் மிகப் பிரபலமாக பேசப்பட்டது, அதைத் தொடர்ந்து "தெகிடி" திரைப்படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்த சூப்பரான திரில்லர் திரைப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் ஜனனி ஐயருக்கு த்ரீ இடியட்ஸ்,7th டே,கூதாரா, மா சு கா ஆகிய திரைப்படங்கள் மலையாள ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

யாக்கை திரி என டைட்டில்

யாக்கை திரி என டைட்டில்

ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற ஜனனி ஐயர், அசோக் செல்வன் உடன் இணைந்து தெகிடி திரைப்படத்தில் நடித்து பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்க மீண்டும் "வேழம்" என்ற திரைப்படத்தின் மூலம் இந்த சூப்பர் ஹிட் ஜோடி இணைந்து மேலும் ஒரு பிளாக்பஸ்டர் மூவியை கொடுக்க உள்ளது. சமீப காலமாக ஆந்தாலஜி திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களும் கலக்கி வர அனைவரையும் கவர்ந்த இக்ஃலூ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பரத் மோகன் இயக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்தில் பரத்துடன் இணைந்து முதன் முறையாக ஜோடி போடுகிறார் ஜனனி ஐயர். மேலும் இந்த படத்திற்கு "யாக்கை திரி "என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது.

நீங்க டோரா புஜ்ஜி

நீங்க டோரா புஜ்ஜி

அடுத்தடுத்த திரைப்படங்களில் இடைவிடாது செம பிஸியாக நடித்து வரும் ஜனனி ஐயர் இப்பொழுது புது ஹேர் ஸ்டைலில் கொள்ளைகொள்ளும் அழகில் க்யூட்டான ஒய்ட் ப்ளேசரில் முட்டி தெரிய குட்டியான டவுசர் போட்டுக்கொண்டு ஹாட் கலந்த க்யூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து புது ஹேர் ஸ்டைலை பார்த்து நீங்க டோரா புஜ்ஜி மாதிரி இருக்கீங்க என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X