பளிச் பளிச் பதிலளித்த ஜனனி ஐயர்... பிரேத்தியேக போட்டோஸ் மூலம் சொல்லாத விஷயங்கள்

சென்னை: பிரபல நடிகை ஜனனி ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மிகவும் நேர்த்தியாக சமீபத்தில் பதிலளித்துள்ளார்.

அவர் சிறந்த 7 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் கேட்ட சிறந்த கேள்விகளுக்கு அவர் சூப்பராக பதிலளித்துள்ளார்.

ஜனனி ஐயர் நடித்த பல படங்கள் இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .சில சமயங்களில் சில காட்சிகள் பிரபலம் ஆகும், சிலருக்கு பாடல்கள் பிரபலம் ஆகும் .அப்படி பல வெரைட்டியான சினிமாக்கள் மூலம் இன்றும் ஜனனி தன் ரசிகர்கள்களை தக்க வைத்து உள்ளார்

அவன் இவன்

அவன் இவன்

இயக்குனர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளிவந்த அவன்-இவன் படத்தில் நடித்து பிரபலமானார். அதற்கு முன்பு ஒரு சில படங்களில் சில காட்சிகளில் நடித்தாலும் அவன்- இவன் படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அதன் பின் வெளிவந்த தெகிடி படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்திருப்பார். விமர்சன ரீதியாகவும் வசூலிலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

மலையாள சினிமா

மலையாள சினிமா

மலையாளத் திரையுலகிலும் சில படங்களில் நடித்து பாராட்டுப் பெற்றுள்ளார். மூன்று புள்ளிகள், கூத்தாரா போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தமிழிலும் அதே கண்கள், முப்பரிமாணம், பலூன், விதி மதி, உல்டா போன்ற படங்களில் நடித்திருந்தார்.ஜனனி ஐயரின் கண்கள் பற்றியும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் பற்றியும் மலையாள சினிமாவில் தனித்துவமான இடம் பிடித்து உள்ளார் .

பிக் பாஸ் 2

பிக் பாஸ் 2

பின்னர் தமிழ் பிக் பாஸ் சீசன் 2-விலும் ஜனனி ஐயர் பங்கேற்றார். சிறப்பாக விளையாடி இறுதி வரை ஜனனி ஐயர் வீட்டிற்குள் இருந்தார். அந்த சீசனில் நடிகை ரித்விகா வெற்றி பெற்றிருந்தார்.ஜனனி ஐயர் பிக் பாஸ் போட்டியில் மிகவும் மெல்லிய கோட்டில் யாருடனும் அதிகம் சண்டை போடாமல் மிகவும் நாகரிகமாக அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு முடிந்த வரை டிக்னிட்டி மெயின்டைன் செய்தார் .

Recommended Video

NANDITA மற்றும் JANANI IYER க்கு விருது | IFL AWARDS 2021 | FILMIBEAT TAMIL
ரசிகர்களின் கேள்விகள்

ரசிகர்களின் கேள்விகள்

உங்களுடைய அடுத்தடுத்து படங்கள் என்னவென்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, வேலம், யாக்கை திரி, முன்னறிவான், பாஹிரா, கருங்காப்பியம் மற்றும் பெயரிடப்படாத வெப் சீரியஸிலும் நடித்து வருவதாக கூறினார். அடுத்ததாக நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்கு பிடித்த நீங்கள் மீண்டும் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் எது என்ற கேள்விக்கு, தெகிடி படத்தின் மது என பதிலளித்துள்ளார். மேலும் மலையாள திரை உலகில் நீங்கள் நடித்ததில் மிகச் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, எனது நண்பன் மற்றும் மிகச்சிறந்த நடிகன் டோவினோ தாமஸ் எனக் கூறி அவருடன் எடுத்த படத்தையும் பகிர்ந்துள்ளார். இறுதியாக நடிகர்களின் உங்களது ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு, நடிகர் கமல்ஹாசன் புகைப்படத்தை பகிர்ந்து "இவரைவிட வேறு யார்" எனவும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X