பிளாக் தீமில் மெழுகு சிலை போல ஜொலிக்கும் ஜனனி!

சென்னை : திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ள பஹீரா திரைப்படத்தில் 8 கதாநாயகிகளில் ஒருவராக ஜனனி நடித்துள்ளார்.

பரத் நடிப்பில் உருவாகும் முன்னறிவான் மற்றும் யாக்கை திரி என அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

தமிழ் சினிமாவில் தமிழ் பேசக் கூடிய மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜனனி இப்பொழுது பிளாக் தீமில் மெழுகு சிலை போல ஜொலிக்குக் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவுகிறது.

 மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது

மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது

தமிழ் சினிமாவில் தமிழ் நன்கு பேசக்கூடிய நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த தமிழ் பெண்ணான நடிகை ஜனனி இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். திரு திரு துரு துரு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜனனிக்கு பாலாவின் அவன் இவன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

 மலையாளத்திலும் வாய்ப்புகள் குவிந்தன

மலையாளத்திலும் வாய்ப்புகள் குவிந்தன

அவன் இவன் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்த தெகிடி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் தொடர்ந்து மலையாளத்திலும் பல படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக உள்ளார்.

 மீண்டும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக

மீண்டும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக

பிக் பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் பெரும் ஆதரவில் இறுதி சுற்று வரை சென்ற ஜனனி நான்காவது இடத்தை பிடித்து கடைசியில் வெளியேறினார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகச்சிறந்த போட்டியாளர் என்ற பாராட்டுகளை பெற்றிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் ஜனனி மீண்டும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக வேழம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி இருக்கும்பொழுது வெளியிடப்பட்டது

Recommended Video

நானும் Chandru உம் பிரிஞ்சுட்டோம் | Youtuber Janani Exclusive Interview | Filmibeat Tamil
 பிளாக் தீமில் மெழுகு சிலை

பிளாக் தீமில் மெழுகு சிலை

தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நடிகர் பரத் எப்படியாவது மீண்டும் பழைய மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் யாக்கை திரி மற்றும் முன்னறிவான் என்ற இரண்டு படங்களில் பரத்துக்கு ஜோடியாக ஜனனி அடுத்தடுத்து ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். பரத் மற்றும் ஜனனி இதுவரை எந்தவொரு திரைப்படத்திலும் இணைந்து நடிக்காத நிலையில் முதல் முறை இணையும் போதே அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருவரும் நடிப்பது தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அழகான கண்களுக்கு பெயர்போன ஜனனி அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வர இப்பொழுது பிளாக் தீமில் மெழுகு சிலை போல ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X