எனக்கு ட்விட்டர்ல கணக்கே கிடையாது.. போலியா நிறைய அக்கவுண்ட் இருக்கு.. ஜான்வி கபூர் விளக்கம்!

மும்பை: நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இவரது மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வசூலிலும் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய அளவிலும் தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்தில் இணைந்து நடித்துள்ளார் ஜான்வி கபூர். அடுத்ததாக ராம்சரணின் ஆர்சி 16 படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். விரைவில் தமிழிலும் இவர் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தில் கியாரா அத்வானியுடன் ஜான்வி கபூர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Janhvi Kapoor Mr amp amp Mrs mahi movie Instagram

நடிகை ஜான்வி கபூர்: பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். சமீபத்தில் இவரது மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் ஜானகி கபூரின் கேரக்டர் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி. ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தெலுங்கில் அடுத்தடுத்த படங்கள்: அடுத்ததாக ராம்சரணுடன் ஆர்சி16 படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல அடுத்ததாக தமிழிலும் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தில் ஜான்வி கபூர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ்டிஆர்48 படம் வரலாற்று பின்னணியில் உருவாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள சூழலில் முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியது.

சிம்புவுடன் நடிக்கிறாரா?: எஸ்டிஆர்48 படத்தில் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் என இரண்டு பாலிவுட் நடிகைகள் இணையவுள்ளதாகவும் படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஜான்வி கபூர். இவரை இன்ஸ்டாகிராமில் 24 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இவரது பதிவுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அடுத்தடுத்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தனக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு உள்ளதாகவும் ட்விட்டரில் கணக்கு எதுவும் இல்லை என்றும் ஜான்வி கபூரின் டீம் விளக்கமளித்துள்ளது.

ட்விட்டர் கணக்கே கிடையாது: ஜான்வி கபூர் பெயரில் ஏராளமான பேக் ஐடிகள் கிரியேட் செய்யப்பட்டு அதன் மூலம் தவறான செய்திகள் ரசிகர்களிடையே கொண்டு சேர்க்கப்பட்டு வருவதாகவும் இதில் உண்மை தன்மை இல்லை என்றும் ஜானகி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரசிகர்கள் இந்த போலி அக்கவுண்டுகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X