Janhvi kapoor: ஒரு முறையாவது அவரோட சேர்ந்து நடிக்கனும்.. ஜான்வி கபூரோட விருப்பத்தை பாருங்க!
மும்பை: பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்து வருகிறார். இவரது சில படங்கள் சொதப்பினாலும் ரசிகர்களை தெடர்ந்து கவர்ந்து வருகிறார். பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தற்போது டோலிவுட்டிலும் ஜூனியர் என்டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக ராம்சரணுடன் நடிக்கவும் ஜான்வி கபூர் கமிட்டாகியுள்ளார். இதனிடையே தமிழிலும் சிம்பு ஜோடியாக எஸ்டிஆர் 48 படத்தில் கியாரா அத்வானியுடன் இணைந்து ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஜான்வி கபூர் எந்த மாதிரியான கேரக்டரில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது.

நடிகை ஜான்வி கபூர்: நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகியாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்தியா படங்களில் அவர் எப்போது இணைவார் என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்த நிலையில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் அடுத்ததாக ராம்சரணுடனும் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஜான்வி கபூர். இதனிடையே தமிழில் இவர் எப்போது நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.
சிம்பு படத்தில் ஜான்வி கபூர்?: 80களின் கனவு கன்னியான ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் மிகப்பெரிய அளவில் பாலிவுட்டில் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து வருகிறார். அவரது படங்கள் அடுத்தடுத்து சொதப்பினாலும் அவருக்கான மார்க்கெட் மிகச் சிறப்பாக அமைந்து வருகிறது. அடுத்ததாக சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தில் ஜான்வி கபூர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் ஜான்வி கபூர் அடுத்ததாக தான் டோலிவுட்டின் இளம் நாயகனான விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜான்வி கபூர் விருப்பம்: ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணுக்கு அடுத்தபடியாக தான் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்க விரும்புவதாகவும் விரைவில் தன்னுடைய ஆசை பூர்த்தியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஜான்வி கபூர். இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் இவரை பாலோ செய்ய வைத்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் போட்டோ ஷூட்களால் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
தமிழ் பெண்ணாக ஜான்வி: மும்பையில் பிறந்து வளர்ந்து மும்பைவாசியாகவே மாறியபோதிலும் தான் தமிழ் பெண்ணிற்கு பிறந்தவர் என்பதை மறக்காமல் உள்ளார் ஜான்வி கபூர். தொடர்ந்து அடுத்தடுத்து தென்னிந்திய கோயில்களுக்கு இவர் விசிட் செய்து வருகிறார். இந்த ஆண்டில் மட்டுமே தான் மூன்று முறை திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளதாக அவர் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த விசிட்களின்போது இவர் பாவாடை தாவணியில் சென்றது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











