ரூ 65 கோடியில் பிரம்மாண்ட வீடு வாங்கிய நடிகை..இன்டீரியர் டிசைனுக்கு மட்டும் பல லட்சம் செலவு!
மும்பை : நடிகை ஜான்வி கபூர் மும்பையில் பல கோடியில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழியில் நடித்து சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடன் ஜோடியாக நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லலாம் அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை நயன்பட செய்து அசத்துவதில் ஸ்ரீ தேவிக்கு நிகர் ஸ்ரீதேவி தான். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஸ்ரீ தேவி 2008ம் ஆண்டு மறைந்தார்.

ஜான்வி கபூர்
ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடித்தது ஒரு சில படங்களே என்றாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். இவர் நடித்த குன்ஜன் சக்சேனா தி கார்கில் கேள் என்ற படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி இந்தியா முழுவதும் ஜான்வியை பிரபலமான நடிகையாக மாற்றியது.

குட் லக் ஜெர்ரி
இதையடுத்து, கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட் லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது தமிழில் நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் படமாகும் இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது. தற்போது மிலி, பவால், மிஸ்டர் & மிஸஸ் மஹி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பல கோடியில் வீடு
இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர், அமிதாப் பச்சன், அனில் கபூர் மற்றும் அஜய் தேவ்கன் போன்ற முன்னணி நடிகர்களின் வீட்டின் அருகே பாந்த்ரா பகுதியில் பிரம்மாண்ட வீட்டினை வாங்கியிருக்கிறார். 4,144 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த டிரிப்ளெக்ஸ் கட்டிடத்தில் 14, 15 என்ற இரண்டு தளத்தை வாங்கி உள்ளார்.

பளபளப்பான தரை..அலங்கார தூண்
வரவேற்பறையில் தந்தம், பளபளப்பான பளிங்கு தரை, சுவர்களில் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய கம்பீரமான சரவிளக்குகள், கண்ணாடிகள் மற்றும் அலங்கார தூண்கள், ஆங்காங்கே அலங்காரத்திற்காக புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் ஜிம், நீச்சல் குளம், மினி ஹோட்டல், தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அவர் வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு ரூ.65 கோடி என்று கூறப்படுகிறது. பத்திரப்பதிவுக்காக மட்டும் ரூ.4 கோடி செலவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











