ஆசை ஆசையாய் கேரட் கேக் செய்த ஜான்வி.. ஒரு வாய் சாப்பிட்டதுமே குஷி கொடுத்த ரியாக்ஷன பாருங்க!

சென்னை: நடிகை ஜான்வி கபூர் செய்த கேரட் கேக்கை சாப்பிட்டு விட்டு குஷி கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.

Recommended Video

ஆசை ஆசையாய் கேரட் கேக் செய்த ஜான்வி.. ஒரு வாய் சாப்பிட்டதுமே குஷி கொடுத்த ரியாக்ஷன பாருங்க!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து கரன் ஜோஹரின் கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து குன்ஜன் சக்ஸேனா, ரூஹி அஃப்ஸானா மற்றும் தோஸ்தானா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

லாக்டவுன்

லாக்டவுன்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜான்வி அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

சமையல் ரெசிப்பி

சமையல் ரெசிப்பி

வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பாலிவுட் நடிகைகள் தங்களுக்குள் இருக்கும் சமையல் செஃப்களை வெளியே கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தீப்பிகா படுகோன், கத்ரீனா கய்ஃ, ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலரும் தாங்கள் வீடுகளில் செய்யும் சமையலையும் ரெசிப்பிக்களையும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

குஷியிடம் கொடுத்த ஜான்வி

குஷியிடம் கொடுத்த ஜான்வி

இந்நிலையில் அந்தப் பட்டியலில் ஜான்வி கபூரும் சேர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஜான்வி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் ஜான்வி கபூர் கேரட் கேக் ஒன்றை தயார் செய்து அதனை தனது தங்கை குஷியிடம் கொடுத்து எப்படி இருக்கு என கேட்கிறார்.

எனக்கு பிடிக்கவில்லை

எனக்கு பிடிக்கவில்லை

அதில் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைக்கும் குஷி, நல்லா இருக்கு என்று கூறுகிறார். பின்னர் ஜான்வி மீண்டும் கேக்கை சாப்பிட சொல்கிறார். ஆனால் மீண்டும் சாப்பிட மறுத்த குஷி எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார். ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ அவரது ஃபேன்ஸ் க்ளப் பக்கத்திலும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X