Janhvi kapoor: காந்தக்கண்ணழகி ஜான்வி கபூரின் போட்டோஷுட்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் மட்டுமில்லாமல் தற்போது தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்ததாக ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்தில் கமிட்டாகி நடித்துவரும் ஜான்வி கபூர், அடுத்ததாக ராம்சரணுடனும் இணைந்து நடிக்கவுள்ளார். அடுத்ததாக இவரை தமிழிலும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் சூர்யாவுடன் இவர் கர்ணா படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படம தமிழிலும் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கவுள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஜான்வி கபூர். தன்னுடைய் குடும்பத்தினருடன் தான் உள்ள புகைப்படங்களை அடுத்தடுத்து பதிவு செய்து வருகிறார். தன்னுடைய தங்கையுடன் அடுத்தடுத்து கோயில்களுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் பதிவிட்டு வருகிறார்., தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அடுத்தடுத்து பதிவிடும் ஜான்வி கபூர் தன்னுடைய படங்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களையும் கொடுத்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 23.6 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

Actress Janhvi Kapoors latest photoshoot pictures trending on Instagram

நடிகை ஜான்வி கபூர்: நடிகை ஜான்வி கபூர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேதியின் மூத்த மகள், தன்னுடைய அம்மா உயிருடன் இருந்தபோதே தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய ஜான்வி கபூர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது தென்னிந்தியாவில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். தொடர்ந்து ராம்சரணுடனும் அடுத்தப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழில்தான் இவரை முதலில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல தகவல்கள் இதுகுறித்து வெளியான நிலையில் அவரது அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் இதை மறுத்திருந்தார்.

Actress Janhvi Kapoors latest photoshoot pictures trending on Instagram

கர்ணா படத்தில் ஜான்வி: இதனிடையே அடுத்ததாக சூர்யாவின் பாலிவுட் என்ட்ரி படமான கர்ணா படத்தில் திரௌபதியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழிலும் வெளியாகவுள்ள நிலையில், தமிழிலும் ஜான்வி கபூர் இந்தப் படம் மூலம் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஜான்வி கபூர். அடுத்தடுத்து பலவிதமான போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவரை இன்ஸ்டாகிராமில் 23.6 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

Actress Janhvi Kapoors latest photoshoot pictures trending on Instagram

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: அடுத்தடுத்து பெஸ்டிவல் தினங்களிலும் தன்னுடைய ரசிகர்களுக்கு வித்தியாசமான வகையில் வாழ்த்து சொல்லி கவர்ந்து வருகிறார் ஜான்வி கபூர். தொடர்ந்து பல்வேறு விளம்பரங்களின் வீடியோக்களையும் பகிர்ந்து வரும் ஜான்வி கபூரின் போட்டோஷுட் புகைப்படங்கள் மாஸ் காட்டி வருகின்றன. அந்தவகையில் தற்போது வெள்ளை நிறத்தில் பழமையும் புழமையும் கலந்தவகை உடையில் போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய பார்வையாலேயே ரசிகர்களை கவரவும் செய்துள்ளார். ஜிகு ஜிகு ஜிகர்தண்டாவாக அவர் இந்த புகைப்படங்களில் காணப்படுகிறார்.

புதிய போட்டோஷுட்: முன்புறத்தில் மணிகளால் கோர்க்கப்பட்ட ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் அவரது இந்த கெட்டப் காணப்படுகிறது. முன்னதாக பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்ததாக பாலிவுட்டில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரதீப் ரங்கநாதன் லீட் கேரக்டரில் நடித்துவரும் எல்ஐசி படத்தில் ஜான்வி ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் விரைவில் தேவரா, ராம்சரண் படம், சூர்யா படம் என அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X