Silk Smitha - பெற்ற தாயையே ஒதுக்கினார் சில்க் ஸ்மிதா.. அதுதான் அவர் செய்த தவறு.. மனம் திறந்த கவர்ச்சி நடிகை

சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகை ஜெயமாலினி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

காந்த கண்ணழகி, திராவிட பேரழகி என்று புகழப்பட்டவர் சில்க். விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட சில்க் ஸ்மிதாவுக்கு ஆந்திரா பூர்வீகம். குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்து சினிமாவுக்குள் நுழைந்த அவர் அதன் பிறகு இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது. தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது.

Actress Jayamalini Talks about Unknown Side of Silk Smitha

சில்க்கின் அறிமுகம்: தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது.

திராவிட பேரழகி: இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது. இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர். அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சுழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று.

தற்கொலை: தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா காதலுக்காகவும், அன்புக்காகவும் ரொம்பவே ஏங்கியவர். அவர் ஒருவரை காதலிக்கவும் செய்தார். முக்கியமாக அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று தனது மனதில் பெரிய மாளிகையையே கட்டி வைத்திருந்தார். ஆனால் திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அதற்கு காரணம் சில்க் ஸ்மிதா காதலித்தவர் ஏமாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சில்க் ஸ்மிதா குறித்து நடிகை ஜெயமாலினி சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

ஜெயமாலினி பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சில்க் ஸ்மிதா குறுகிய காலத்திலேயே பெயரும், பணமும், புகழும் சம்பாதித்தவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எங்களுடன் பேசவே மாட்டார். ஒரு படத்தில் ஹீரோவை சுற்றி வரும் நடிகைகளாக நான், ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா மூன்று பேரும் நடித்திருந்தோம். சில்க் ஸ்மிதா டாப்பில் இருந்தவர். ஆனால் அந்த நிலையில் இருக்கும்போதே அவர் தற்கொலை செய்துகொண்டது வருத்தமான விஷயம்.

சில்க் செய்த தவறு: அவர் தனது வாழ்க்கையில் செய்த பெரிய தவறு ஒன்று இருக்கிறது. அது காதல். காதலிக்கலாம் தவறில்லை. ஆனால் பெற்றோரை ஒதுக்கி வைக்கக்கூடாது. அவர் தனது தாயையும், சகோதரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரை மட்டுமே நம்பி வாழ்ந்தார். ஆனால் உறவினர்களை பக்கத்தில் வைத்திருந்திருக்க வேண்டும். அவர்கள் நமது பணத்தை பாதி தின்றாலும் கொஞ்சமாவது நமக்காக வைப்பார்கள். ஆனால் ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள்; முக்கியமாக நமக்கு உறவினர்கள் ஆதரவு இல்லை என்று அவர்கள் தெரிந்துகொண்டால் ரொம்பவே ஏமாற்றுவார்கள். அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் பலியானார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X